KollywoodNow

Tamil CInema Updates

காதல் ரீ செட் ரிப்பிட் – விமர்சனம்

காதல் ரீ செட் ரிப்பிட் – விமர்சனம்
நாயகி ஜியா சங்கரை தூரத்தில் இருந்து பார்ப்பதையே தன் வாழ்வின் பாக்கியம் என்ற மனநிலையில் இருக்கும் நாயகன் மதும்கேஷ், அவரை ஒருதலையாக காதலிக்கிறார். ஜியா சங்கர், அவரது நண்பர் அர்ஜுன் அசோகனை காதலிக்கிறார். இதற்கிடையே ஜியா சங்கர் மரதியால் பாதிக்கப்படுகிறார். தூங்கி எழுந்தால் முந்தைய நாளில் நடந்த அனைத்தையும் மறந்து விடும் நிலைக்கு சென்று விடுகிறார். இதனால் தான் யார் ? என்று தெரியாமல் ஒவ்வொரு நாளும் தவிக்கும் அவரிடம், காதலனாக அறிமுகமாகி பயணிக்க தொடங்குகிறார் மதும்கேஷ். அவரது இந்த பொய், ஜியா சங்கரின் வாழ்க்கையில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்துகிறது, என்பதை முக்கோண காதல் கதையாக சொல்வதே ‘காதல் ரீசெட் ரிப்பீட்’.
நாயகியாக, பாடகி அதிதியாக அறிமுக நடிகை ஜியா ஷங்கர் நடித்திருக்கிறார். துறுதுறு சேட்டைப் பேர்வழியாகவும், என்ன நடந்தது? எங்கே இருக்கிறோம்? சுற்றியிருக்கும் இவர்கள் யார்? என அனைத்தும் மறந்து தவிப்பவராகவும் அருமையாக நடித்து, இப்படத்தை தன் தோளில் தூக்கிப் பிடித்து நிறுத்தியிருக்கிறார்.
நாயகனாக, ஒருதலைக் காதலர் சித்தார்த்தாக அறிமுக நடிகர் மதும்கேஷ் நடித்திருக்கிறார். அறிமுக நடிகர் போல் இல்லாமல் அனுபவம் வாய்ந்த நடிகர் போல், ஒருதலைக் காதல் தவிப்பை இயல்பாகவும், சிறப்பாகவும் கையாண்டிருக்கிறார்.
நாயகியின் காதலர் ஹரி என்ற ஹரிச்சந்திரனாக அர்ஜுன் அசோகன் நடித்திருக்கிறார். மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ள அர்ஜுன் அசோகனுக்கு இது முதல் தமிழ்ப் படம். தனக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தைச் சரியாகச் செய்திருக்கிறார்.
எம்.எஸ்.பாஸ்கர், ஜெயப்பிரகாஷ், விஜி சந்திரசேகர் உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை குறைவின்றி நிறைவாக வழங்கியிருக்கிறார்கள்.
இப்படத்தை ஏ.மகாதேவுடன் சேர்ந்து எழுதியிருக்கிறார் இயக்குநர் விஜய். முக்கோணக் காதலில் ஞாபகமறதியைக் கலந்து புதிய வடிவில் இதை கொடுக்க முயற்சித்திருக்கிறார். என்றாலும், திரைக்கதையில் கிஞ்சம் கிரிஞ்ச் தனம் இருக்கிறது. ஆனாலும் நீண்ட நாட்களுப் பிறகு பார்த்த காதல் படம் என்ற வகையில் மனதைத் தொடுகிறது.
காதல் ரீ செட் ரிப்பிட் – ஸ்வீட் ட்ரீம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *