KollywoodNow

Tamil CInema Updates

சில ஆண்டுகளில் தமிழ் சினிமாவுக்கு நல்ல மாற்றங்கள் ஏற்படும் – தமிழ் குமரன்

ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க, திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள படம் “ரூம் பாய்”

அறிமுக நடிகர் C.நிகில் ஹீரோவாக நடிக்க ஹர்ஷா, இமான் அண்ணாச்சி, பிர்லா போஸ், காத்து கருப்பு, சாதனா, கவிதா விஜயன், கற்பகம் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர் . மும்பை மாடல் நிதி மரோலி ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார்.

ஏலகிரியில் உள்ள ஸ்டார் ஓட்டல் ஒன்றில் ஹீரோ, ரூம் பாயாக பணிபுரிகிறார். ஒரு நாள் மேனேஜர் மர்மமான முறையில் இறந்து போகிறார். அதே நேரத்தில் சிறுவர் சீர்திருத்தப் பள்ளி கண்காணிப்பாளர் ஒருவர் மாயமாகிறார். இந்த இரண்டு சம்பவங்களுக்கும் நாயகன் மற்றும் நண்பர்களுக்கும் என்ன தொடர்பு என்பது தான் கதை. ஃபேமிலி சென்டிமென்ட் கலந்த சஸ்பென்ஸ் திரில்லர் படமாக இப்படம் உருவாகியுள்ளது.

ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் தமிழ் குமரன் பேசியதாவது..,

“இன்று காலையில் தமிழ் திரைப்படத் துறையைச் சேர்ந்த முக்கியமான பலர் ஒன்றாக கூடி ஆலோசனை நடத்தினோம். தமிழ் சினிமா எந்த திசையில் செல்ல வேண்டும், அதை அடுத்த கட்டத்திற்கு எப்படி கொண்டு செல்ல வேண்டும் என்ற பல முக்கியமான முடிவுகள் அந்த சந்திப்பில் எடுக்கப்பட்டன, “குறிப்பாக சின்ன படங்களுக்கு தியேட்டர்களில் தேவையான முன்னுரிமை கிடைக்க வேண்டும் என்பதையும் இன்று பேசினோம். அதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் சில முக்கியமான நடைமுறைகளை உருவாக்கி இருக்கிறோம். அடுத்த சில ஆண்டுகளில் தமிழ் சினிமாவுக்கு நல்ல மாற்றங்கள் ஏற்படும் என்று நம்புகிறேன்,”

புதிதாக சினிமாவுக்கு வரும் இளம் இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் சில வழிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த ‘ரூம்பாய்’ திரைப்படம் கண்டிப்பாக ஒரு வெற்றி படமாக அமையும் என்று நான் நம்புகிறேன். டிரெய்லர் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளது படக்குழுவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *