KollywoodNow

Tamil CInema Updates

டி.என்.2026 தங்க நட்சத்திரம் – விமர்சனம்

குல்கந்த் குமார் பிழைப்பு தேடி சென்னைக்கு வரும் ஒரு வெளிமாநிலத் தொழிலாளி. அவருக்குத் தமிழ் ஒழுங்காகத் தெரியாது, மிகவும் ஏழ்மையானவர். பொள்ளாச்சியைச் சேர்ந்த செல்வாக்குமிக்க ஜமீந்தாரும், எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகருமான சிவலிங்கம் மன்றாடியார், குல்கந்திடம் ஒரு ஈர்ப்பைக் காண்கிறார். ஒரு சாதாரணத் தொழிலாளியை வைத்து ஒரு ‘சூப்பர் ஸ்டாரை’ உருவாக்கி, அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடத் திட்டமிடுகிறார்.சிவலிங்கத்தின் பயிற்சியால், குல்கந்த் குமார் ‘தங்க நட்சத்திரம்’ என்ற மாஸ் ஹீரோவாக மாறுகிறார். அவருக்குக் கோடிக்கணக்கான ரசிகர்கள் உருவாகிறார்கள். புகழின் உச்சத்தில் இருக்கும் குல்கந்த், தான் உருவாக்கியவரின் பேச்சைக் கேட்காமல் சுயமாக அரசியலில் குதிக்க முடிவெடுக்கிறார். அதற்கும் சிவலிங்கம் மன்றாடியார் தன்னுடைய சாதுர்யத்தை பயன்படுத்தி உதவிகள் செய்கிறார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் ஈகோ பிரச்சனை ஏற்பட்டு பிரிய நேரிடுகிறது. அதன் பின் குல்கந்த் மீண்டும் பொள்ளாச்சிக்குச் சென்று சிவலிங்கம் மன்றாடியாரிடம் வந்து மன்னிப்பு கேட்டு சேர்ந்து கொள்கிறார். குல்கந்த் மீண்டும் சிவலிங்கத்தை ஏன் சேர்த்து கொண்டார்? குல்கந்தின் அரசியல் பயணம் வெற்றி கண்டதா? ‘உருவாக்கியவன்” சிவலிங்கத்திற்கும், ‘உருவான” சூப்பர் ஸ்டார் குல்கந்திற்கும் இடையே நடக்கும் மறைமுக அதிகாரப் போட்டியில் ஏற்பட்ட திடீர் திருப்பம் என்ன என்பதை அரசியலும், நகைச்சுவையோடு ம் சொல்லியிருக்கிறார் இயக்குனர் உமாபதி எஸ்.ராமையா
தமிழ் சினிமாவில் அரசியல் கதைகளை அடிப்படையாக வைத்து வெளியாகும் திரைப்படங்களுக்கு எப்போதும் ஆதரவும் இருக்கும் எதிர்ப்பும் இருக்கும். ஆனால் இந்தப்படத்திற்கு ஆதரவு மட்டுமே இருந்தது. அந்த ஆதரவை தக்க வைத்துக்கொண்டிருக்கிறதா என்பதை பார்க்கலாம்.
ஜமீன் தார் தம்பி ராமையாவுக்கு தனக்கு பணம் செல்வாக்கு இருந்தாலும், இருக்கும் ஊடை தாண்டினால் தன்னை யாருக்கும் தெரியவில்லையே என்கிற வருத்தம் கட்டப்படும் இடத்தில் அவரின் நடிப்பும் அலட்டலும் ரசிக்க வைக்கிறது. குல்கந்து குமாராக வரும் நட்டி அசத்தியிருக்கிறார். விஜய்யின் சாயல் இருந்தாலும் பல கதாநாயகர்களையும் நக்கலடித்து திரைக்கதை நகர்வதால் கைதட்ட முடிகிறது.
நிகழ்காலத்தில் நடக்கும் அரசியல் பிரச்சாரம், மக்களைச் அந்திக்கும் காட்சி, ஈகோ, போட்டி எல்லாம் இன்றைய சூழலை பிரதிபலிக்கிறது.
ஒரு நடிகன் உருவாகும் விதத்தை படிப்படியாகவும் அவன் கடந்து வரும் பாதையையும் படத்தில் அழகாகவும் நகைச்சுவையாகவும் சித்தரித்துள்ளார்கள். அவன் அரசியலுக்கு வரும்போது அத்தனை நாள் ரசித்தவர்கள் கைதட்டியவர்கள் எல்லாம் எப்படி எதிரிகளாக மாறுகிறார்கள் என்பதையும் ,ஒரு ஹீரோ கட்சி ஆரம்பிக்கும் வரை எல்லாருக்கும் கொண்டாடுவார்கள் . ஆரம்பித்த பிறகு எல்லாரும் துண்டாடுவார்கள் என்பதையும் காட்டியுள்ளார்கள். நேற்றுவரை ஆராதித்த மனிதர்கள் எப்படி நிறம் மாறுகிறார்கள் என்பதையும் காட்டுகிறார்கள்.
அவனை பல்வேறு சந்தர்ப்பங்கள் எப்படி ஆளாக்குகிறது இவற்றையெல்லாம் சந்தித்து கடந்து மேல வர வேண்டும் என்பதற்கான காட்சிகளையும் வைத்துள்ளார்கள்.
சம்பந்தப்பட்ட காட்சிகள் ஒவ்வொன்றும் அதிரடி சரவெடியாக சிரிப்பு வெடியாக இருக்கிறது. படத்தின் தன்மையை வெளிப்படுத்தும் வகையில் அனைத்து காட்சிகளையும் ஒளிப்பதிவு செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் பி ஜி முத்தையா.அதேபோல இயக்குநருடன் இணைகரம் கோர்த்து இசை வழங்கியுள்ளார் இசையமைப்பாளர் தர்புகா சிவா .அதற்கேற்ற வகையில் பாடல்களும் பின்னணி இசையும் அமைந்துள்ளன.
டி.என்.2026 – சிரிப்பும் சிறப்பும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *