ஹீரோ விது சேலத்திலிருந்து தனக்கான அடையாளம் என்ன என்பதைத்தேடி சென்னை வருகிறார். விவசாயப் பின்புலத்தைச் சேர்ந்த அவர் அக்ரிகல்ச்சர் படித்தவர். சென்னையில் கிடைத்த வேலையைப் பார்த்துவருகிறார். தான் எதை நோக்கிச் செல்வது என்ற குழப்பத்தோடு திரியும் அவர் வாழ்வில் ப்ரீத்தி அஸ்ராணி வருகிறார். இவர்களின் காதல் பயணம் இவர்களின் வாழ்க்கைப் பயணத்தை எங்கு கொண்டு செல்கிறது என்பதே படத்தின் கதை
கதையின் நாயகனாக விது நல்ல தேர்வு! தன்னால் முடிந்த மட்டும் நல்ல நடிப்பை வழங்கியுள்ளார். நாயகி ப்ரீத்தி அஸ்ராணி படத்தின் பெருந்தூண். அட்டகாசமான நடிப்பால் நம்மை உருக்குகிறார். அழகு ரியாக்சன்ஸ், நடனம் என பக்கா மாஸ் ஹீரோயின் மெட்டிரியலாக உருவாகியுள்ளார். விதுவின் நண்பராக வரும் அவினாஸ் அருமையான நடிப்பால் படத்தை ஆங்காங்கே கலகலப்பாக மாற்றுகிறார். மாஸ்டர் மகேந்திரன் நெகட்டிவ் ரோல் செய்துள்ளார். ஒரு காட்சியில் அசத்தலாக நடித்து ஸ்கோர் வாங்குகிறார்
ஏற்கனவே சசிகுமாரின் படத்தில் அறிமுகமாகி நடிப்பில் கவர்ந்த நாயகி பிரீத்தி அஸ்ரானி, இந்தப் படத்தில் விதுவின் காதலியாகி நம் இதயத்தைக் கவர்கிறார்.
வழக்கமாக படங்களில் காதலன்தான் தன் காதலை மெய்ப்பிக்கப் போராடுவான். ஆனால் இதில் அந்த வேலையை பிரீத்தி எடுத்துக்கொண்டு, பாலியல் உறவு கூட இயல்பான ஒரு விஷயம்தானே தவிர கொண்டாடப்பட வேண்டிய பெரு நிகழ்வு இல்லை இல்லை என்பதை ‘செயல்முறை’யாகவே விதுவுக்கு புரிய வைப்பதில் அனைத்து இளைஞர்களையும் கவர்ந்து விடுகிறார்.
ஆனால் அவரது கேரக்டரைசேஷன் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதை இயக்குனர் கவனித்து திருத்தி இருக்கலாம்.
விதுவின் நண்பராக வரும் அவினாஸ், வழக்கமான காமெடி நண்பனாக இல்லாமல் கொஞ்சம் அறிவுபூர்வமாகவும் சிரிக்க வைக்கிறார்.
வில்லன் போல உருவெடுக்கும் மாஸ்டர் மகேந்திரன் பாத்திரத்தின் முடிவும் காற்று போன பலூன் ஆகி விடுகிறது.
நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் ஆதிரா பாண்டிய லஷ்மி, மகனுடன் பேசாமல் இருப்பதற்கு வலுவான காரணம் இல்லை.
சிங்கிள் பேரண்டாக இருக்கும் நாயகியின் அம்மா சிந்து ஷியாம், பாத்திர அளவில் பிரீத்தியை எந்த கண்காணிப்பும் கண்டிப்பும் இன்றி வளர்ப்பது பொருந்தவில்லை.
மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு படத்தை உயிரோட்டமாக வைத்திருக்கிறது.
ஷான் ரோல்டனின் இசையில் பாடல்கள் வழக்கமான பாணியில் இல்லாமல் சற்றே புருவத்தை உயர்த்த வைக்கும் அளவில் புதுமையாக ஒலிக்கின்றன.
ஒளிப்பதிவு, இசை ஆகியவற்றுடன் ஆர்.எஸ்.சதீஷ் குமாரின் படத்தொகுப்பும் பக்காவாக அமைந்திருப்பதில் இயக்குனர் ரத்ன குமார் ஸ்கோர் செய்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் இன்னுமொரு காதல் கதை
29 – காலிக்கும் நேரமிது
29 விமர்சனம்