அர்ஜுன் தாஸ்,அன்னா பென்,யோகி பாபு, வடிவுக்கரசி,அகிலன்,நந்தகோபால்,VTV கணேஷ்,தீபா ராமானுஜம்,
ராதா ரவி ,அருள் தாஸ்,ஷாஜி சென்,தம்பி ராமையா,ரமேஷ் திலக் ,பரத்வாஜ் ரங்கன்,இமான் அண்ணாச்சி,
பொன்வண்ணன்,ராகு எசக்கி ,சதானந்த் நடித்துள்ளனர்.
ஹரிஷ் துரைராஜ் எழுதி இயக்கி உள்ளார்.இசை: ஷான் ரோல்டன்,ஒளிப்பதிவு: அரவிந்த் விஸ்வநாதன்,படத்தொகுப்பு: அருள் மோசஸ் ஏ,தயாரிப்பு: ஹரிஷ் துரைராஜ்.தமிழ்நாடு திரையரங்கு வெளியீடு: டெல்டா ஸ்டுடியோஸ்,வெளியீடு: டி. ஆர். எஸ். முத்துக்குமார் மற்றும் கே. ஜே. ஐயப்பன்.
வாழ்க்கையில் அடிபட்ட அர்ஜுன் தாஸ் தவறான வழியில் பணம் சேர்த்துப் பெரியாளாக வேண்டும் என்று நினைக்கிறார். காதல் கை கூடாதது காதலியின் தந்தை நம்பாதது போன்று அதற்கான நெருக்கடிகளும் நிர்பந்தங்களும் அவருக்கு ஏற்படுகின்றன. அந்த வகையில் அவர் மின்சார வாரியத்தில் தற்காலிக வேலை பார்த்து வசூல் செய்யும் பணத்தைக் களவாடி விடுகிறார்.பணம் கட்டுபவர்களுக்குப் போலி பில்லை கொடுத்து ஏமாற்றி அந்தப் பணத்தைச் சுருட்டிக் கொள்கிறார்.
பிறகு ஒரு நிதி மோசடிக் கம்பெனி தொடங்கி ஏமாற்றுகிறார்.அன்னாபென் வாடகைக்கு வீடு பிடித்து அதை லீசுக்கு விட்டு ஒரு கம்பெனியின் பெயரில் மோசடி செய்து வருகிறார்.இவர்களுடன் யோகி பாபு, வடிவுக்கரசி இணைந்து கொள்கிறார்கள். ஒரு கட்டத்தில் இவர்கள் இணைந்து செயல்படுகிறார்கள். குயிக் மணி, மங்களபுரம் நிதி மோசடி என்று களை கட்டுகிறது.லட்சம் லட்சமாகச் சம்பாதிக்கிறார்கள்.சம்பாதித்த பணத்தினை அந்நாள் வரை ஆபத்தில் உதவிய நண்பருக்குக் கொடுக்கிறார் அர்ஜுன் தாஸ்.ஆனால் அந்த நண்பர் கொலையாகிறார்.பணம் பறிபோய் விடுகிறது.மீண்டும் விட்ட இடத்தில் இருந்து தொடங்க மோசடிகளைச் செய்கிறார்கள்.ஒரு கட்டத்தில் போலீசில் சிக்கிக் கொள்கிறார்கள். பிறகு அங்கிருந்து தப்பிக்கிறார்கள். கர்நாடகா சென்று அங்கே சரவணா ஓட்டல் என்று வைத்துப் பிழைக்கிறார்கள். அவர்களைத் தேடும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒரு கட்டத்தில் அன்னா பென்னின் மகனைக் கடத்திப் பொறி வைத்துப் பிடிக்கிறார் . சிறுவனை மீட்க எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருக்கிறார் அர்ஜுன் தாஸ்.அப்போது அந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் தனக்குப் பெரிய அளவில் பணம் வேண்டும் என்றும் பெரிய மோசடிகளைச் செய்யத் தூண்டுகிறார்.பெரிய அளவில் திட்டம் போட்டு மோசடியில் இறங்குகிறார்கள்.
கதாநாயகன் அர்ஜுன் தாஸ் வழக்கம் போல் இல்லாமல் இப்படத்தின் மூலமாக நகைச்சுவை கலந்து தன் நடிப்புச் திறமை வெளிப்படுத்தி உள்ளார், கதாநாயகி அண்ணா பென் தனக்குத் தந்த பணியை அவரும் சிறப்பாகவும் பணி நிறைவு செய்து உள்ளார்.நகைச்சுவையும் உணர்ச்சியும் கலந்த காட்சிகளில் அவர் வெளிப்படுத்தும் நடிப்பு பாராட்டத்தக்கது
வடிவுக்கரசி அவர்களின் நடிப்பாகும். குடும்பத்தின் தலைமைப் பொறுப்பை ஏந்தும் அவரது கதாபாத்திரம், பல இடங்களில் சிரிப்பையும் சில தருணங்களில் உணர்ச்சியையும் உருவாக்குகிறது. படத்தின் முக்கிய பங்காகவும் பலமாகவும் அமைந்திருக்கிறது. இவருக்கு இணையாக யோகி பாபு தன் நையாண்டி நடிப்பை கலந்து சிரிப்புக்கு உத்தரவாதமாக இருக்கிறார்கள் .
குடும்பத்துடன் ரசிக்கும் வகையில் திரைக்கதையும் களமும் இருப்பதால் எந்தவித தயக்கமும் இன்றி குழந்திகளோடு படம் பார்க்கலாம்.
கான் சிட்டி விமர்சனம்