ஆர்.எஸ். இன்ஃபோடைன்மென்ட் (RS Infotainment Pvt. Ltd.)” நிறுவனம் மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்துள்ளது.
கடினமான கடலோர சூழல்களில் படமாக்கப்பட்டுள்ள ‘மண்டாடி’, அதன் பிரம்மாண்டமான காட்சியமைப்புகள் மற்றும் உணர்வுப்பூர்வமான கதைக்களத்தின் மூலம் ரசிகர்களுக்கு புதிய திரையரங்க அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் பாடலான ‘மண்டாடி மண்டாடி’ வெளியாகி பெரிதும் பேசப்பட்ட நிலையில் தற்போது இரண்டாவது பாடல் வெளியாகி உள்ளது.
“உசுரே நீதான் புள்ள” எனும் இனிமையான காதல் பாடல் வெளியாகியுள்ளது. சூரி மற்றும் மகிமா நம்பியார் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் பாடல், காதல் மற்றும் இருவருக்கிடையேயான அழகான இணைப்பை உணர்வுபூர்வமாகப் பதிவு செய்கிறது.
இதமான Melody + மனதை தொடும் வரிகள் மற்றும் கதாநாயகன்–கதாநாயகியின் அழகான கெமிஸ்ட்ரியுடன் உருவாகியுள்ள “உசுரே நீதான் புள்ள”, கேட்பவர்களின் மனதில் காதலின் அழகை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது..
சுருக்கு பைய்யா சுருங்கும் காலம் வர உன்னில் ஒன்னா வாழ வேணும் புள்ள – என மயக்கும் பாடல் வரிகளில் – உசுரே நீதான் புள்ள – ஜெயஸ்ரீ மதிமாறன் வரிகள் எழுத, கபில் கபிலன்,சஞ்சனா அவர்கள் பாடியுள்ளனர்..
மண்டாடி செப்டம்பர் 10,2026 திரையரங்கில் வெளியாகிறது.