ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பில், இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் தணிக்கையில் ‘யு/ஏ’ சான்றிதழ் பெற்றுள்ளது. இதையடுத்து, படம் வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
சூரி கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் சுஹாஸ், மகிமா நம்பியார், சத்யராஜ், ரவீந்திர விஜய், அச்சுத்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
பாரம்பரிய மீனவர்களின் பாய்மரப் படகுப் பந்தயத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் விளையாட்டு, சண்டை, உணர்வு மற்றும் உறவுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
கடலில் படமாக்கப்பட்ட சவாலான காட்சிகளில் சூரி தானே நடித்திருப்பதுடன், கதாபாத்திரத்திற்காக அவர் மேற்கொண்ட உடல் பயிற்சியும் படத்தின் சிறப்பம்சமாகக் கூறப்படுகிறது.
‘மண்டாடி’ திரைப்படம் செப்டம்பர் 10-ஆம் தேதி வெளியாக உள்ளதால், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.