சங்ககிரி ராஜ்குமார் ஒரே மனிதர் ஒரு திரைப்படத்தின் எல்லா பணிகளையும் செய்து வெற்றிகரமாக திரையிட்டு காட்டியிருக்கிறார்.
இதற்காகவே ராஜ்குமாரை பாராட்ட வேண்டும்.
நான்கு நண்பர்கள் மற்றும் கார் ஓட்டுநர் ஒருவர் என ஐந்து குழுவின் பயணத்தில் தொடங்கும் கதை, மனிதனின் பேராசையால் ஒரு உயிரினம் கூட இல்லாமல் உலகம் அழிந்துவிடும் ஒரு கண்டுபிடிப்பின் ரகசியம் தெரிய வருகிறது. அதை பயன்படுத்தி 10 நாட்கள் உலகையே ஆள வேண்டும் என்று ஆசைப்படும் நான்கு நண்பர்களின் ஆசை நிறைவேறியதா ?, யாரும் இல்லாத உலகில் தனி ஆளாக வாழ துடிக்கும் நாயகனின் ஆசையின் பின்னணியில் எத்தகைய ஆபத்து இருக்கிறது, என்பதை விவரிப்பது தான் கதை.
இதனை வைத்துக்கொண்டு காட்டுக்குள் பயணம் அமெரிக்காவில் நகரங்களின் மீது பறப்பது என்று அசத்தலான காட்சி அமைப்புகளோடு படத்தை இயக்கியிருக்கிறார்.
வழக்கம் போல எல்லா திரைப்படங்களியிக் விமர்சனம் செய்வது போல் இதனையும் செய்யக்கூடாது. இது ஒரே நபர் செய்திருக்கும் சாதனை முயற்சி. அதை நாம் பாராட்டி அவரை உற்சாகப்படுத்த வேண்டும். என்ற நிலையில் படத்தின் கதைக்குள் செல்லாமல் இருப்பது நலம்.
படத்தின் இறுதி காட்சியில் எப்படியெல்லாம் ஒரு காட்சியை எடுத்தார் என்பதை பற்றிய காட்சிகளை வெளியிட்டிருக்கிறார். உண்மையில் பிரமிக்க வைக்கிறார் ராஜ்குமார். தியேட்டரில் கைதட்டல் அடங்க வெகு நேரமானது. அவரின் முயற்சிக்கு நமது பாராட்டும் வாழ்த்தும்.
ஒன் மேன் – சாதனை
ஒன் மேன் – விமர்சனம்