அர்ஜூன் தாஸ் முதல் காதல் தோல்வியால் வாழ்க்கையில் விரகதியாக இருக்கிறார். ஒரு நாள் அவரது கல்லூரி ஜீனியர் அதிதி சங்கர் அவரை சந்தித்து, காதலிப்பதாக சொல்ல, அவரது காதலை ஏற்பதா இல்லையா என்று மனக்குழப்பத்தில் இருக்கிறார் அர்ஜூந்தாஸ். ஆனால் அவரை தன் வழிக்குக் கொண்டு வர பல முயற்சிகளை செய்து ஒப்புக்கொள்ள வைக்கிறார். ஆனால் ஈறூஆறூ ஓன்று சேரும் நேரத்தில் பழைய காதலி வந்து நிற்கிறார். என்ன செய்வார் அர்ஜூந்தாஸ் என்பதே படம்.
அர்ஜூன் தாஸ் வழக்கமான நடிப்பில் ஸ்கோர் செய்திருந்தாலும் அவரை பயன்படுத்தும் இயக்குனர்கள் அவரை புதுவிதமாக காட்ட வேண்டும் என்கிற எந்த முயற்சியும் இல்லாமல் காட்டியிருப்பது சோர்வடைய செய்கிறது. மற்றபடி அர்ஜுந்தாஸ் நடிப்பில் குறை சொல்ல முடியாது உணர்ச்சி பொங்க பல காட்சிகளில் திறமை காட்டியிருக்கிறார்.
அதிதி ஷங்கர் முரட்டுத்தனமாக காதல் செய்வதும், துறு துறுப்பு காட்டுவது கொஞ்சம் மிகையாக தெரிந்தாலும் அழகுதான். அவரை குளோசப் காட்சிகளில் காட்டிவிடாமல் இயக்குனர் கையாண்டிருப்பது கவனத்திற்குரியது.
முதல் காதலியாக நடித்திருக்கும் சோனா ஒலிக்கல் அப்பாவி நடிப்பில் கவர்கிறார். அவரது குடும்பப்பின்னணியாக சொல்லப்படும் கதை உருக்கம். ஆனால் அதை காதலை நிராகரிக்க காரணமாகக் காட்டப்படுவது அபத்தம்.
சித்ரா லட்சுமணன், தேவ தர்ஷினி உள்பட பலரும் கதைக்கு வலு சேர்த்திருக்கிறார்கள்.
இயக்குனர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் பழைய கதையில் புதிய திரைக்கதை சேர்த்துக் கொடுத்திருக்கிறார். அவரது முயற்சி பாதி கிணறு தாண்டிய கதைதான்.
படம் முழ்க்க பாடல்கள் ஆக்கிரமிப்பு இசை ஷேஷாம் அப்துல் வகாப் சில பாடல்கள் தாளம் போட வைக்கின்றன. அர்விந்த் விஸ்வநாதனின் ஓளிப்பதிவு குளு குளு என்று இருக்கிறது.
ஒன்ஸ் மோர் – இளமைக் காதல்
ஒன்ஸ் மோர் – விமர்சனம்