KollywoodNow

Tamil CInema Updates

பெத்லகேம் குடும்ப யூனிட் – விமர்சனம்

கேரளாவில் கிறிஸ்தவ சமுதாயத்தில் ஒவ்வொரு சர்ச்சுக்கும் கீழ் கிறிஸ்தவக் குடும்பங்கள் தொகுக்கப்பட்டு இருக்கும். அவை ஒரு குட்டி சமுதாயம் போலவே இருக்கும். அவர்களுக்குள் சண்டை சச்சரவுகள் இருந்தாலும் அவர்களுக்கும் ஓர் ஒற்றுமையும் பேணப்படும்.

அப்படி பெத்லஹேம் என்ற பெயரில் அமைந்த குடும்பங்களின் பெயரே பெத்லஹேம் குடும்ப யூனிட் .

அந்த யூனிட் குடும்பங்களில் ஒன்றில் கல்யாணம் ஆகாமல் முதிர் கண்ணனாக வாழும் நபர் ஜெஸ்டின் ( நிவின் பாலி).. அவனது தம்பி குறும்படம் எடுத்துக் கொண்டிருக்கிறான்.

அந்த பெத்லஹேம் குடும்பங்களில் ஒன்றின் வீட்டுக்கு வரும் இளம்பெண் ஆஷ்லிக்கு (மமிதா பைஜூ) ஜெஸ்டின் மீது காதல் வருகிறது. அவனுக்கும் உள்ளுக்குள் பிடித்தாலும் வயது வித்தியாசம் காரணமாக மறுக்கிறான்.

ஜெஸ்டினின் தம்பி குறும்படத்தில் நடித்த பெண்ணை காதலிக்கிறான் . அது அவளது அண்ணனுக்கு பிடிக்காமல் அடிதடியாகிறது.

ஒரு நிலையில் ஜெஸ்டின் ஆஷ்லியின் காதலை ஏற்க, அஷ்லியின் மாமாவுக்கு விஷயம் தெரிந்து அது ஊருக்கே தெரிய அஷ்லியின் குடும்பம் அவளை பிரிக்கிறது.

இனி எனக்கும் ஜெஸ்டினுக்கும் எந்த உறவும் இல்லை என்ற பைபிள் மேல் சத்தியம் செய்கிறாள் அஷ்லி. விஷயம் அறிந்து உடைந்து போகிறான் ஜெஸ்டின்.

கேரளாவில்தான் ஹீரோக்கள் தங்கள் வயதுக்கும் தங்கள் உருவத்துக்கும் பொருத்தமான கதாபாத்திரங்களிலும் கதைகளிலும் நடிக்கிறார்கள். நிவின் பாலி அதில் முக்கியமானவர். கொஞ்சமும் மாறினாலும் பூமர் அங்கிள் என்று சொல்லப்படும் நிலையில் இருக்கும் பாத்திரத்தை மிக அழகாக கையாண்டிருக்கிறார். அதுவும் மமிதா பைஜுவிடம் காதல் மொழி பேசத்தெரியாமல் தடுமாறும் இடத்தில் கைதட்டல். இது மாதிரியான திரைப்படம் மனதை இறகாக மாற்றி காற்றில் பறக்க விடுகிறது.
மமிதா பைஜு நடிப்பில் சும்மா மிரட்டி விட்டிருக்கிறார். படம் முழுவதும் அளவான அதேசமயம் பொருத்தமாக நடிப்பில் மின்னுகிறார்.
பெண்கள் கதாபாத்திரங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கும் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது,
கிரண் ஜோஷியோடு சேர்ந்து எழுதி, கிரிஷ் ஏ டி இயக்கி இருக்கும் படம் பல காட்சிகளில் நக்கலும் நையாண்டியும் சேர்ந்து படம் முழுவதும் கலகலப்பாகவே இருக்கிறது.
தமிழில் இப்படியான திரைப்படம் வருவது அரிது.
பெத்லகேம் குடும்ப யூனிட் – நகைச்சுவை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *