கமல்ஹாசனின் ராஜகமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் தயாரிக்கப்படும் படத்தின் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. சிவகார்த்திகேயனின் பிறந்த நாளில் வெளியாகியிருக்கும் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியிருக்கிறது. அமரன் என்று பெயர் வைக்கப்ப்ட்டுகிறது.
ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். படத்தின் முதல் போஸ்டரே சிவ கார்த்திகேயனை வேறு மாதிரி காட்டியிருக்கிறது.
ராணுபவத்தின் பின்னணியில் நடக்கும் கதையாக இருக்கும் என்கிறார்கள். ஜி.வி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். படப்பிடிப்பு தொடங்கும் நாட்கள் பிறகு அறிவிக்கப்படும்.