இயக்குநர் அசோக் தேஜா இயக்கத்தில், மது கிரியேஷன்ஸ் & சம்பத் நந்தி டீம்வொர்க்ஸ் இணைந்து அதிக பட்ஜெட்டில் உருவாகும் பல மொழி திரைப்படமான ’ஒடேலா 2’ வில் நடிகை தமன்னா பாட்டியா இணைந்துள்ளார். இதன் படப்பிடிப்பு இன்று காசியில் பிரம்மாண்டமாக துவங்கியுள்ளது!
கடந்த 2022 இல் ஓடிடியில் வெளியான ‘ஒடேலா ரயில்வே ஸ்டேஷன்’ பெரும் வெற்றிப் பெற்றது. அசோக் தேஜா இயக்கத்தில் உருவான இந்த க்ரைம் த்ரில்லர் கதையை சம்பத் நந்தி எழுதினார். இப்போது அதன் சீக்வல் ‘ஒடேலா 2’ என்ற பெயரில் உருவாகிறது. கதை, நடிப்பு, தயாரிப்பு மற்றும் தொழில்நுட்ப தரம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தக் கதை மிகப்பெரியதாக இருக்கும்.
’ஒடேலா 2’ கதையில் நடிகை தமன்னா பாட்டியா நாயகியாக நடிக்கிறார். இந்தக் கதை உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் மத்தியில் பிரபலம் என்றாலும் ஓடிடியில் தனது சமீபத்திய ஹிட்களால் கவனம் ஈர்த்த தமன்னா இதில் இணைந்திருப்பது கதைக்கு கூடுதல் ப்ளஸ். இப்படத்தை பல மொழிகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். சம்பத் நந்தி திரைக்கதையில் அசோக் தேஜா இயக்கும் இப்படத்தை மது கிரியேஷன்ஸ் மற்றும் சம்பத் நந்தி டீம்வொர்க்ஸ் பேனர்களின் கீழ் டி மது தயாரிக்கிறார். இதன் வழக்கமான படப்பிடிப்பு இன்று காசியில் துவங்கியது.
’ஒடேலா 2’ கதை பல கோணங்களையும் ஆழமான வேர்களையும் கொண்டது. இதன் சீக்வல் கதை கிராமம், அதன் வளமான கலாச்சாரம், பாரம்பரிய மரபுகள் மற்றும் அதன் உண்மையான மீட்பர் ஒடேலா மல்லண்ண சுவாமி தனது கிராமத்தை தீய சக்திகளிடமிருந்து எப்போதும் எவ்வாறு பாதுகாக்கிறார் என்பதை மையமாகக் கொண்டுள்ளது.தமன்னா