கதை ; பள்ளிபருவத்தின் போது பகையான இரண்டு நண்பர்கள் பல வருடங்கள் கழித்து கல்லூரியில் படிக்கும் போது அதே பகை மாறாமல் மோதுகிறார்கள். இதில் புதிதாக மாணவர்களுக்குள் மோதல் ராகிங், காதல், ஊடல் என்று கதை இளமை துள்ளலோடு பயணிக்கிறது.அதே ஊரில் இருக்கும் மத்தியமைச்சரின் மகள் கல்லூரி தேர்தல் நடக்க விடாமல் செய்ய, மீறி இரண்டு நண்பர்களும் தேர்தல் நடத்த திட்டமிடுகிறார்கள். இதனால் எற்படும் பகையால் மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்; அதிலிருந்து அவர்கள் விடுபடுகிறார்களா ? இல்லையா ? என்பதே கதை.
நடிப்பு ; அர்ஜுன்தாஸ் சீனியராகவுவும் காளிதாஸ் ஜெயராம் ஜூனியராகவும் வருகிறார்கள்.; அவர்கள் வரும் காட்சிகள் அக்னி நட்சத்திரத்தை நினைவுபடுத்துகிறது. ரசிக்கும்படி இருக்கிறது. அடிநாதமாக நட்பு என்கிற உண்ர்வு இருந்தாலும் ஈகோவால் மோதிக்கொள்ளும் இடங்கள் இளமைக் கொண்டாட்டமாக இருக்கிறது. அதுவும் காதல் காட்சிகளில் கைதட்டல் கேட்கிறது. காதலிகள் யாரும் மனதில் நிற்கவில்லை. ஆனாலு நடிப்பிலும் காதல் காட்சிகளிலும் தாராளாமாக வருகிறார்கள். முதல் பாதி காதல் மறு பாதி மோதல் என்று விறு விறுப்புக்கு பஞ்ச்சமில்லை என்றாலும் நீளம் அதிகமாக இருக்கிறது. அர்ஜூன் தாஸ் வழக்கம்போல் நெருப்பு பிழம்பாக எப்போதும் வருகிறார். க்ளைமேக்ஸ் காட்சியில் ஜெயராமிடம் அடி வாங்குவதும், காதலியின் கையைப் பிடித்து ஆஸ்பத்திரியில் இருப்பதும் உருக்கம். காளிதாஸ் சரியான சேட்டை. ரசிக்க வைக்கிறார். டி.ஜே.பானு, சஞ்சனா நடராஜன், அம்ருதா ஸ்ரீனிவாசன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
இயக்கம் ; பிஜாய் நம்பியார் விறு விறு திரைக்கதியில் பெரும் கூட்டத்தை வைத்து வேலை வாங்கியிருப்பது பாராட்டுக்குரியது. இன்னும் அழுத்தமான கதை இல்லாததால் படத்தின் முக்கியத்தும் குறைகிறது. காதல் காட்சிகளை அழகாக காட்டியிருக்கிறார். காதலும் மோதலுமாக படம் வந்து நீண்ட நாட்களாகி விட்டது.
போர் – காதலும் மோதலும்