KollywoodNow

Tamil CInema Updates

அதா சர்மாவின் அடுத்த சர்ச்சை

அதா சர்மா மலையாளத்தில் கேரளா ஸ்டோரி படத்தில் நடித்த போது பரபரப்பாக பேசப்பட்டவர். தற்போது அதே அளவுக்கு சர்ச்சையை கிளப்பும் பஸ்தர் தி நக்‌சல் ஸ்டோரி என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். கேரளா ஸ்டோரி திரைப்படத்தில் இஸ்லாமிய பெண்கள் கடத்தப்பட்டு தீவிரவாத குழுக்களுக்கு காம இச்சைக்கு பயன்படுத்தப் படுவது போல காட்டப்பட்டது. இதை சுதிப்சோ சென் இயக்கியிருந்தார். இந்தப் படத்தையும் அவரே இயக்கியிருக்கிறார். இதனால் படத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இடம் பெற்றிருக்க வாய்ப்பிருக்கிறது என்ற பேச்சு எழுந்திருக்கிறது.
இதில் நீரஜா மாதவன் என்ற ஐபிஏஸ் அதிகாரி வேடத்தில் அதா சர்மா நடித்திருக்கிறார். இது வெறும் கதை அல்ல பல உண்மை சம்பவங்களை அடிப்பையாக கொண்டிருக்கும் என்று தெரிவித்திருக்கிறார். சீனாவின் ஆதரவோடு சிலர் எப்படி நம் நாட்டை பிரிக்க முயற்சிக்கிறார்கள் என்பதை காட்டப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இந்தப் படம் வரும் போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள். அதா சர்மா அடுத்த பரபரப்புக்கு தயாராகி விட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *