KollywoodNow

Tamil CInema Updates

5 சதவீத படங்கள் தான் வெற்றி பெறுகிறது – அண்ணாதுரை

அண்ணா புரொடக்ஷன்ஸ் சார்பில் வி.சுகந்தி அண்ணாதுரை தயாரிப்பில், இயக்குநர் ஏ.எஸ்.முகுந்தன் இயக்கத்தில், ஆனந்த் ராஜ், பிக்பாஸ் சம்யுக்தா இணைந்து நடிக்க, கலக்கலான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள படம் ‘மெட்ராஸ் மாஃபியா கம்பெனி’.
விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்வினில்
அண்ணா புரொடக்ஷன்ஸ் சார்பில் அண்ணாதுரை பேசியதாவது..,
எங்கள் திரைப்பட விழாவிற்கு வந்துள்ள அனைத்து பிரபலங்கள் நண்பர்களுக்கு நன்றி. இந்தப் படத்தை அழகாக உருவாக்கித் தந்த இயக்குநர் ஏ.எஸ்.முகுந்தன் அவர்களுக்கு நன்றி. இப்படத்திற்கு வலுவான இசையைத் தந்த ஶ்ரீகாந்த் தேவா அவர்களுக்கு நன்றி. இப்படத்தில் அருமையாக நடித்துத் தந்த ஆனந்த் ராஜ் சார், சம்யுக்தா மேடம் ஆகியோருக்கு நன்றி. திரைத்துறையில் வருடத்திற்கு வரும் 240 படங்களில் 5 சதவீத படங்கள் தான் வெற்றி பெறுகிறது. ஆனாலும் வருடத்திற்கு வருடம் புதிய தயாரிப்பாளர்கள் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. திரைப்படம் மீது இருக்கும் மோகம் தான் இதற்குக் காரணம். நாம் தினசரி செய்தித்தாளில் படிக்கும் ஒரு விசயத்தை, அது நிஜத்தில் நடந்திருந்தால் என்னவாகும் என்பது தான் இப்படம். கண்டிப்பாக மக்கள் ரசிக்கும் படமாக இருக்கும். அனைவருக்கும் நன்றி.
நடிகை ஆராதியா பேசியதாவது..,
எல்லோருக்கும் வணக்கம். நான் திரையில் நன்றாக நடிக்க என்னோட டீமின் உழைப்பு தான் காரணம். என் இயக்குநர் தொழில் நுட்ப கலைஞர்கள் எல்லோருக்கும் நன்றி. ஶ்ரீகாந்த தேவா சாரின் இசையில் எனக்கு நாளாவது படம் நன்றி சார். ஆனந்த்ராஜ் சாரை சின்ன வயதிலிருந்து பார்த்து ரசித்துள்ளேன், அவருடன் நடித்தது மகிழ்ச்சி. சம்யுக்தா மேடமுடன் நடித்தது மகிழ்ச்சி. எனக்கு ஆங்கிலோ இண்டியன் கேரக்டர், ஆனால் ஒரு தமிழ்பெண்ணான என்னை நடிக்க வைத்த இயக்குநருக்கு நன்றி. மாரி செல்வராஜ் இண்டர்வியூவில் டெடிக்கேடிவாக இருந்ததால் நடிகைகளை மலையாளம் எனப் பார்க்காமல் நடிக்க வைத்தேன் என சொல்லியிருந்தார். நாங்களும் டெடிக்கேடிவாக தான் நடிக்கிறோம். தமிழிலும் நல்ல நடிகைகள் இருக்கிறோம் அவரது பார்வைக்குச் செல்லவில்லை என நினைக்கிறேன். பத்திரிகைகள் தான் கொண்டு சேர்க்க வேண்டும் நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *