KollywoodNow

Tamil CInema Updates

மாஸ்க் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !!

The Show Must Go On & Black Madras Films நிறுவனங்கள் சார்பில், ஆண்ட்ரியா ஜெரேமியா , S P சொக்கலிங்கம் தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் மேற்பார்வையில், கவின், ஆண்ட்ரியா ஜெரேமியா, ருஹானி சர்மா நடிப்பில், அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்கத்தில் மாறுபட்ட களத்தில், உருவாகியிருக்கும் கமர்ஷியல் திரைப்படம் மாஸ்க்.

2025 நவம்பர் 21 ஆம் தேதி திரைக்குவரவுள்ள நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக பண்பலை நண்பர்கள் முன்னிலையில், கோலாகலமாக நடைபெற்றது.
நடிகர் விஜய் சேதுபதி பேசியதாவது..,

விகர்னன் மிக அருமையாகப் பேசினார். வெற்றிமாறன் மெண்டார் என்றார்கள். பேச்சுக்கும் அவர் தான் மெண்டார் தான் போல. இந்தப்படத்தின் டிரெய்லர் பார்த்தேன் மிக மிகப் பிடித்திருந்தது. விடுதலை ஷீட்டிங்கில் இந்தப்படம் ஆரம்பிப்பதாகச் சொன்னார். மாஸ்க் கதை, எம் ஆர் ராதா, என ஒவ்வொரு ஐடியாவும் நன்றாக இருந்தது. இந்த விழாவில் எல்லோரும் அட்டகாசமாகப் பேசினார்கள். ராமரில் ஆரம்பித்து எல்லோரும் அசத்தலாகப் பேசினார்கள். வெற்றி மாறன் மாஸ்கே இல்லாத எல்லோரையும் சமமாக நடத்தும் ஒரு மனிதர். விடுதலை ஷீட்டிங்கில் வெற்றிமாறன் சாரிடம் ராமர் மாட்டியிருப்பதாக நினைத்தேன், ஆனால் அவர் பேசியதைக் கேட்ட பிறகு தான் ராமரிடம் தான் வெற்றிமாறன் மாட்டியிருக்கிறார் எனத் தோன்றியது. கவினுக்கு வாழ்த்துக்கள் திரையில் அவர் வசீகரமாக இருக்கிறார். அவரை திரையில் பார்க்க பிடித்திருக்கிறது. இன்று வித்தியாசமான கதையைத் தேர்ந்தெடுப்பதில் மேலே கீழே போகலாம், ஆனால் இது தான் பயிற்சி. இது நீண்ட காலம் தாங்கும் வாழ்த்துக்கள். சின்ன வயதில் பீச்சில் சிலை பார்த்தேன் அப்புறம் ஆண்ட்ரியாவைப் பார்த்தேன் இன்னும் அப்படியே இருக்கிறார். அதே அழகு. ருஹானி அழகாக இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள். ஜீவி சார் நான் எந்தப்படம் கேட்டாலும் ஒத்துக்கொண்டதே இல்லை அவர் இசை ரொம்ப பிடிக்கும் அவருடன் படம் செய்ய ஆசை வாழ்த்துக்கள். சொக்கலிங்கம் சாருக்கு வாழ்த்துக்கள். அர்ச்சனா நிறையப் படம் நடிக்க வாழ்த்துக்கள். படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *