KollywoodNow

Tamil CInema Updates

லாக் டவுன் – விமர்சனம்

கதை கொரோணா பரவிய லாக் டவுன் காலத்தில் நடக்கிறது. சார்லி, நிரோஷா தம்பதியினர் தங்களது மகள்கள் அனுபமா பரமேஸ்வரன் இளைய மகளோடு வசித்து வருகிறார்கள். மகள்களை ரொம்பவும் கண்டிப்பாக வளர்க்க வேண்டும் என்ற சிந்தனையுடன் இருக்கும் சார்லிக்கு ஒரு அதிர்ச்சி. அனுபமா கர்பமாக இருக்கிறார். தன் குடும்பத்தினர்க்கு தெரியாமல் எப்படி அந்த கருவை கலைக்க முயற்சிக்கிறார் என்பதையும், அதற்காக அவர் எவ்வளவு துயரத்தை சந்திக்கிறார் என்பதையும் பரபரப்பாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஏ.ஆர்.ஜீவா.
படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அனுபமா பரமேஸ்வரன் நடித்திருக்கிறார். படத்தின் மொத்த ஜீவனே அனுபமாவின் நடிப்புத்தான். அம்மா, அப்பாவிடம் பாசத்தை பொழிவதாகட்டும், தங்கையிடம் மல்லுக்கு நிற்பதாகட்டும் இயல்பாக நடித்திருக்கிறார்.
தனக்கு நடந்த அநீதியைப் போட்டு மனதில் குமையும் முகபாவம், மருத்துவர்களிடம் கெஞ்சுவதும், பார்ட்டியில் போடும் ஆட்டமும் அட்டகாசப்படுத்தியிருக்கிறார்.
சார்லி வழக்கம்போல் பதட்டமும் பாசமும் முகத்தில் காட்டி நடித்திருக்கிறார். பெற்றோர்களை விட பாதுகாப்பானவர்கள் வேறு யாருமில்லை என்கிற கருத்தோடு படம் நிறைவடைகிறது.
டென்சனான கதைக்களம் என்றாலும் அதை கையாண்ட திரைக்கதையில் இன்னும் சுவராஸ்யம் கலந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
படத்தில் ஒளிப்பதிவாளர் கே. சக்திவேல் நிறைவாக செய்திருக்கிறார். இசை ரகுநந்தன், சித்தார்த் விபின் கச்சிதம்.
காலம் கடந்து வந்திருப்பதால் லாக் டவுன், கொரோனா போன்ற வார்த்தைகள் சலிப்பை ஏற்படுத்துகின்றன. மற்றபடி படத்தில் சொல்லபடுகின்ற விஷயம் இன்றைக்கு தேவையாக இரும்பட்சத்தில் அதை நிகழ்காலத்தோடு இணைத்து சொல்லியிருக்கலாம்.
லாக் டவுன் – கற்பும் களவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *