KollywoodNow

Tamil CInema Updates

ஜனநாயகன் – விமர்சனம்

ஜனநாயகன் – விமர்சனம்
மலைவாழ் மக்களை காப்பாற்றிய முன்னாள் காவல்துறை அதிகாரியான தமிழன் வெற்றி கொண்டான் தனக்கு நெருக்கமான காவல் அதிகாரி கவுதம் மேனன் மகளை வளர்த்து வருகிறார். அவளை நல்ல பலசாலியாக இராணுவத்தில் பணியாற்றக்கூடிய பெண்ணாக வளர்க்க பாடுபடுகிறார். இதற்கிடையில் கார்ப்பரேட் வில்லன் பாபிதியோல் தன்னுடைய சதித்திடங்களால் உலகில் இருக்கும் பல நாடுகளுக்கு ஆயுதங்களையும், போதை மருந்துகளையும் கடத்தி விற்பதோடு அதை இந்தியாவிற்குள் அதிகமாக புழக்கத்தில் விடுகிறான்.
நாட்டில் சாதி, மத மோதல்களை தூண்டி விட்டு மக்கள் கையில் ஆயுதங்கல் எளிதாகக்கிடைக்கும்படி செய்வதே அவனது திட்டம். இதற்கிடையே முதலமைச்சராக இருக்கும் பிரகாஷ்ராஜை தனது பிடியில் வைத்துக் கொண்டு பல சதித்திட்டங்களை அரங்கேற்றுகிறான். இந்த நிலையில் கதாநாயகன் விஜய் வளர்ப்பு மகளான மமிதா பைஜூவை இராணுவத்தில் சேர்த்தாரா ? நாட்டில் ஆயுதக்கடத்தில் கும்பலை தடுத்தாரா என்பதுதான் கதை.
விஜய் என்ற ஒற்றை மனிதர் படம் முழுவதும் ஆள்கிறார். சிரித்தால், நடந்தால், ஆடினால் தியேட்டர் அலறுகிறது. மெஸ்மரிசம் செய்த மனிதர். மகளுக்காக மெனக்கெடுவதும், அவளே வெறுக்கும்போது கண் கலங்குவதும், ஆக்ரோஷத்தில் எதிர்களைப் புரட்டி எடுப்பதும் என்று அசத்தியிருக்கிறார் தமிழக முதலைமைச்சர் தளபதி விஜய் அவர்கள்.
பகவத் கேசரியில் பார்த்த பல காட்சிகள் என்றாலும் இங்கு முன்னாள் முதல்வரை வைத்து எடுத்திருக்கும் வசனம் வரும்போது இப்போது அது நன்றாகவே வேலை செய்கிறது. இன்று விஜய் முதல்வர் என்பதும் கூடுதல் பலம். ஆனால் பல காட்சிகளில் மகளோடு அவர் வரும் இடங்களில் இழுவை வலுவாக இருக்கிறது.
பாபிதியோல் சட்டையை கழற்ற வைக்கிறார் பிரகாஷ் ராஜ். மமிதா பைஜூ விஜய்க்காக தன் காதலை மறக்கிறார். பூஜா ஹெக்டே பொம்மை பாத்திரம். பிரகாஷ் ராஜ் வரும் இடங்களில் ரசிக்கலாம். சண்டைக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கிறது.
கதை ஒரு நேர்கோட்டில் இல்லாமல் எங்கெங்கோ சென்று மறுபடியும் விஜய் கையில் கிடைக்கிறது. ஆனாலும் ஒரு கட்டத்தில் எப்போது க்ளைமேக்ஸ் வரும் என்கிற தவிப்பு வருவதை தவிர்க்க முடியவில்லை.
இயக்குனர் வினோத் நாயகன் விஜய் இழுத்த இழுப்புக்கெல்லாம் சென்றிருப்பது தெரிகிறது. அனிருத் இசையில் பாடல்கள் தாளம் போட வைக்கின்றன. ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன் கைவண்ணத்தில் ட்ரோன்கள் க்ளைமேக்ஸ் மோதல் காட்சி படத்தை கொட்டாவி விட வைக்கிறது. பாடல்களை பிரமாண்டமாகக் காட்டியிருக்கிறார் சத்யன் சூரியன்.
ஜனநாயகன் – மிரட்டல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *