KollywoodNow

Tamil CInema Updates

பழனி திருக்கோயில் சொத்துக்களை பாதுகாக்க அதிரடி திட்டம்

மாண்புமிகு இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் திரு.ரமேஷ் அவர்களின் உத்தரவின் பெயரில்,

அறநிலையத் துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகளை இணைத்து ஒரு புதிய ஆய்வுக் குழு பிரத்யேகமாக அமைக்கப்படுகிறது.

இந்த குழு பழனி திருக்கோயில் சொத்துக்களை முழுமையாக ஆய்வு செய்து, கணக்கில் உள்ள சொத்துகள் மற்றும் வருவாய்கள், கணக்கில் வராத சொத்துகள், சட்ட விரோத ஆக்கிரமிப்புகள் மற்றும் சட்ட விரோத பெயர் மாற்றங்கள் போன்றவை நடந்துள்ளதா என முழுமையாக அறிக்கை தயார் செய்து அதன் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க அமைக்கப்படுகிறது.

பழனி திருக்கோயில் சொத்துக்களை முழுமையாக ஆய்வு செய்து கோயில் சொத்துக்களை பாதுகாக்கும் ஒரு முக்கிய முன்னெடுப்பாக இது அமையவிருக்கிறது.

பழனியை தொடர்ந்து அறுபடை வீடுகளுக்கும் இதே போல் குழு அமைத்து ஆய்வை அமைச்சர் உத்தரவின் பெயரில் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *