KollywoodNow

Tamil CInema Updates

நீர்நிலைகளை தூர்வாரி பணியினை தொடங்கி வைத்தார் ஆனந்த் MLA

மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. N. ஆனந்த் MLA அவர்கள், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரி பராமரிக்கும் சிறப்புப் பணிகளின் இரண்டாம் நாளான இன்று, சென்னை மாவட்டம், ஆலந்தூர் வட்டம், மணப்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள அடையாற்றினை சீரமைக்கும் பணியினை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வின்போது, அடையாற்றின் நீரோட்டத்தை மேம்படுத்துதல், மழைக்காலங்களில் வெள்ளநீர் சீராக வடிந்தோடுவதை உறுதிசெய்தல், நீர்நிலையின் கொள்ளளவை அதிகரித்தல் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் விரிவாக கேட்டறிந்து, பணிகளை தரமாகவும் விரைவாகவும் நிறைவேற்றுமாறு அறிவுறுத்தினார்.

இந்நிகழ்வில் மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு.ம.விஜய் பாலாஜி அவர்கள், மாண்புமிகு ஆலந்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. எம்.ஹரிஷ் அவர்கள், தெற்கு வட்டார துணை ஆணையர் திரு.அஃதாப் ரசூல்,இ.ஆ.ப., அவர்கள், தலைமை பொறியாளர் திருமதி ஜானகி அவர்கள், நீர்வளத் துறை பொறியாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *