KollywoodNow

Tamil CInema Updates

சென்னையில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

சென்னையில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகள்!

மாண்புமிகு தியாகராய நகர் சட்டமன்ற உறுப்பினரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான திரு. N. ஆனந்த் MLA அவர்கள், சென்னை அசோக் நகர் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமின் பணி நியமன ஆணைகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு, தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில், சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் ஏற்பாடு செய்திருந்த இம்மாபெரும் வேலைவாய்ப்பு முகாமில் 300-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன. மேலும், 7,000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு, பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கான வாய்ப்புகளை பெற்றனர்.

இந்நிகழ்வில் மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. ஜா. முகமது பர்வேஸ் அவர்கள் முன்னிலை வகித்தார்.

மேலும், சென்னை மாவட்ட ஆட்சியர் திருமதி எஸ். மலதி ஹெலன், இ.ஆ.ப. அவர்கள், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை செயலாளர் திரு. கே. வீர ராகவ ராவ், இ.ஆ.ப. அவர்கள், துறை சார்ந்த உயர் அலுவலர்கள் மற்றும் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

இளைஞர்களின் திறனை வேலைவாய்ப்பாக மாற்றி, அவர்களின் எதிர்காலத்தை வளமாக்கும் வகையில் நடைபெற்ற இம்முகாம், வேலை தேடும் இளைஞர்களுக்கு சிறந்த வாய்ப்பாக அமைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *