KollywoodNow

Tamil CInema Updates

மணப்பாறையில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர் சங்கத்தின் 2-வது மாநில மாநாடு!

மணப்பாறையில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர் சங்கத்தின் 2-வது மாநில மாநாடு!

மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. N. ஆனந்த் MLA அவர்கள், திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நடைபெற்ற தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர் சங்கத்தின் 2-வது மாநில மாநாட்டில் கலந்து கொண்டு, தொழிலாளர்களின் நலன் மற்றும் உரிமைகள் தொடர்பாக சிறப்புரையாற்றினார்.

இம்மாநாட்டில் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் திரு. ரா. கதிரவன் அவர்கள், முசிறி சட்டமன்ற உறுப்பினர் திரு. விக்னேஷ் அவர்கள், கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. C. விஜயபாஸ்கர் அவர்கள், கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. அருள்ராஜ் அவர்கள், முன்னாள் அமைச்சர் திரு. வெல்லமண்டி நடராஜன் அவர்கள், முன்னாள் அமைச்சர் திருமதி. வளர்மதி அவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும், மாவட்டக் கழகச் செயலாளர்கள் திரு. ஜெகன் மோகன் அவர்கள், திரு. M. விக்னேஷ் அவர்கள், கரூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் திரு. பாலசுப்பிரமணியன் அவர்கள், திரு. மு. இராமாநிதி அவர்கள், திரு. த. இந்திரஜித் அவர்கள், திரு. ராதாகிருஷ்ணன் அவர்கள், TNRDLU மாநில பொதுச் செயலாளர் திரு. கிருஷ்ணசாமி அவர்கள், திரு. மூர்த்தி அவர்கள், திருமதி வகிதா நிஜாம் அவர்கள், திரு. வீரபாண்டியன் அவர்கள், திரு. கே. சுப்புராயன் அவர்கள், திரு. ஆர்.வி. ராமலிங்கசாமி அவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு மாநாட்டை சிறப்பித்தனர்.

தொழிலாளர்களின் உரிமைகள், நலன் மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பான முக்கியத்துவம் வாய்ந்த கருத்துகள் இம்மாநாட்டில் எடுத்துரைக்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *