பாண்டி பஜாரில் பொதுமக்கள், வியாபாரிகளிடம் அமைச்சர் குறைகேட்பு
சென்னை தியாகராய நகரில் உள்ள பாண்டி பஜார் சாலையில், தியாகராய நகர் சட்டமன்ற உறுப்பினரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான திரு. என். ஆனந்த் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களை நேரில் சந்தித்து, அவர்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் முன்வைத்த கோரிக்கைகளுக்கு உரிய நடவடிக்கை எடுத்து விரைந்து தீர்வு காணப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.
மேலும், தொகுதி மக்களின் தேவைகள் மற்றும் குறைகள் குறித்து தன்னை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றும் அமைச்சர் கூறினார்.