KollywoodNow

Tamil CInema Updates

தமிழ் ரசிகர்களைக் கவர தயாராகும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ – செப்டம்பர் 4-ல் வெளியீடு!

மலையாளத்தில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’, தற்போது தமிழ் ரசிகர்களையும் கவர தயாராகியுள்ளது. இப்படத்தின் தமிழ் பதிப்பு டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், படம் வரும் செப்டம்பர் 4-ஆம் தேதி தமிழ் திரையரங்குகளில் வெளியாகிறது.

ஒரு மிடில் ஏஜ் ஆணுக்கும், கல்லூரியில் படிக்கும் இளம்பெண்ணுக்கும் இடையே உருவாகும் காதலை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை நகர்வதை டிரெய்லர் உணர்த்துகிறது. வயது வித்தியாசம் கொண்ட இருவருக்கிடையேயான ஈர்ப்பு, காதல், அதனால் ஏற்படும் குழப்பங்கள், உணர்வுகள் மற்றும் சமூகத்தின் பார்வைகள் என பல்வேறு அம்சங்களை சுவாரஸ்யமான முறையில் டிரெய்லர் முன்வைக்கிறது.

வழக்கமான காதல் கதைகளிலிருந்து மாறுபட்ட ஒரு உறவை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தில், நகைச்சுவை மற்றும் உணர்வுப்பூர்வமான தருணங்களும் இணைந்துள்ளன. டிரெய்லரில் இடம்பெறும் காட்சிகள், கதையின் அடுத்தடுத்த திருப்பங்கள் குறித்து ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.

இப்படத்தை கிரிஷ் ஏ.டி இயக்கியுள்ளார். அவருடன் இணைந்து கிரண் ஜோசி திரைக்கதையை எழுதியுள்ளார். திலீஷ் போத்தன், ஃபஹத் பாசில் மற்றும் ஷ்யாம் புஷ்கரன் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

படத்தில் நிவின் பாலி மற்றும் மமிதா பைஜு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் சங்கீத் பிரதாப், சுரேஷ் கிருஷ்ணா, வினய் ஃபோர்ட், ரோஷன் ஷனவாஸ், ஷ்யாம் மோகன், ஸ்ரீந்தா, பார்வதி அய்யப்பதாஸ், மீனாட்சி ரவீந்திரன், பிந்து பணிக்கர், வெட்டுக்கிளி பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

விஷ்ணு விஜய் இசையமைத்துள்ள இப்படத்திற்கு அஜ்மல் சாபு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆகாஷ் ஜோசப் வர்கீஸ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

பாவனா ஸ்டூடியோஸ் (Bhavana Studios) தயாரித்துள்ள இப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் Future RunUp Films வழங்கி விநியோகிக்கிறது. தமிழகமெங்கும் இப்படத்தை Primark Productions திரையரங்குகளில் வெளியிடுகிறது.

மலையாளத்தில் பெற்ற வரவேற்பைத் தொடர்ந்து, தற்போது தமிழ் ரசிகர்களிடையே இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. காதல், நகைச்சுவை, உணர்வுகள் என வித்தியாசமான உறவின் பல்வேறு பரிமாணங்களைப் பேசும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’, வரும் செப்டம்பர் 4-ஆம் தேதி தமிழ் திரையரங்குகளில் வெளியாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *