KollywoodNow

Tamil CInema Updates

தாய் நிலம் – விமர்சனம்

தாய்மண்ணை விட்டு வேறொரு நிலத்தில் வாழ்க்கையைத் தேடி வரும் தந்தைக்கும் மகளுக்கும், தமிழகம் தங்களுக்கான வாழ்விடமாக மாறியதா? என்ற கேள்வியை முன்வைக்கிறது இந்தப் படம்.
இலங்கைப் போரில் மனைவியை இழந்த அமர் ராமச்சந்திரன், தனது சொந்த மண்ணையும் விட்டுப் பிரிந்து மகள் நேஹா அமருடன் தமிழகத்திற்கு வருகிறார். இங்கு அன்பையும் ஆதரவையும் தேடி அலைபவருக்கு, துணை நிற்கும் மனிதர்களும், உறவாக அரவணைக்கும் உள்ளங்களும் கிடைத்ததா என்பதுதான் கதையின் அடிநாதம்.
அமர் ராமச்சந்திரன், கதையின் நாயகனாக தனது இயல்பான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். நேஹா அமர், தனது விழிகளில் வெளிப்படும் வலி மற்றும் உணர்வுகள் மூலம் மனதில் நிற்கிறார். பாலாசிங், நிமிஷா நம்பியார், தீபக், பத்மஜா அமர் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் கதாபாத்திரங்களுக்கு ஏற்ற வகையில் சிறப்பாகப் பங்களித்துள்ளனர்.
படம் சொல்ல வரும் உணர்வுகளை இசையின் வழியாக பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்க இசையமைப்பாளர் முயன்றிருக்கிறார். ஒளிப்பதிவில் இன்னும் அழுத்தமான காட்சிகளும், சிறப்பான ஷாட்களும் இடம்பெற்றிருக்கலாம்.
ஈழத்தமிழர்கள் அனுபவித்த போரும் அதன் வலியும் சொல்லி முடிக்க முடியாதவை. அந்த வரலாற்று வலியை சினிமா வழியாகப் பதிவு செய்யும் ஒவ்வொரு முயற்சிக்கும் தனி முக்கியத்துவம் இருக்கிறது. படத்தின் திரைமொழியில் சில குறைகள் தென்பட்டாலும், தாய்மண்ணின் வலியைப் பேசும் இப்படைப்பை ஆதரிப்பது அவசியமானது.
இயக்குநர் அபிலாஷின் இந்த முயற்சி, எதிர்காலத்தில் இன்னும் வலிமையான படைப்புகளாகத் தொடர வாழ்த்துகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *