KollywoodNow

Tamil CInema Updates

ரணம் – விமர்சனம்

கதை ; சென்னையில் முக்கிய இடத்தில் இருக்கும் காவல் நிலையம் மற்றும் சில இடங்களில் மனித உடல் பாகங்கள் எரிக்கப்பட்ட நிலையில் அட்டை பெட்டிகளில் கிடைக்கிறது. இது தொடர்பாக விசாரணையை போலீஸ் தொடங்குகிறது. புதிய காவல் அதிகாரியாக தான்யா ஹோப் வருகிறார். எப்போதும் போல் இந்த விசாரணையில் காவலர்ளுக்கு உதவிடும் ஓவியர் வைபவ் இந்த வழக்கிலும் உதவுகிறார். அதில் பல உண்மைகள் வெளியாகிறது. அடுத்தடுத்து நடக்கும் கொலையில் பின்னால் பல திடுக்கிடும் சம்பவங்கள் நடக்கின்றன. திகில் கதையை விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஷெரீப்.

நடிப்பு ; நாயகன் வைபவிற்கு படம் முழுவதும் வரும் வாய்ப்பு நன்ராகவே நடித்திருக்கிறார். தான்யா ஹோப் விசார்ணையை அதிகாரியாக வந்தாலும் வைபவின் உதவியை நாடுகிறார். நந்திதா ஸ்வேதா மிரட்டல் நடிப்பில் ஸ்கோர் பண்ணுகிறார். இதர கதாபாத்திரங்கள் நிறைவாக வருகிறார்கள்.

இயக்கம் ; இயக்குனர் ஷெரீப் வித்தியாசமான கதையை கையைலெடுத்திருக்கிறார். பாராட்டுகள். அதை சொல்லும் விதத்தில் லேசான தடுமாற்றம் தெரிகிறது. முதல் பாதி வேகமாக நகர்ந்தாலும் இரண்டாம் பாதியில் கதை தேங்கி நிற்கிறது. பிற கதாபாத்திரங்கள் கதை நகர்விற்கு உதவுகிறார்கள்.

இசை ; அரோல் கரோலின் இசை படத்தை கண் இமைக்காமல் பார்க்க வைக்கிறது.

ஒளிப்பதிவு ; பாலாஜி கே ராஜா பணி சிறப்பாக இருக்கிறது.

ரிசல்ட் ; சஸ்பென்ஸ் திரில்லர்
————————————

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *