KollywoodNow

Tamil CInema Updates

சர்ச்சையை கிளப்பும் கோட்சே திரைப்படம்

ராமலட்சுமி புரொடக்சன் மற்றும் ஈஞ்ச நாடு 18 பட்டி கணேஷ் நாகா புரொடக்சன், சிவன் OTT ஆகிய மூன்று நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘நாதுராம் கோட்சே.’

படம் பற்றி இயக்குநர் வீரமுருகன் பகிர்ந்தவை…
மகாத்மா காந்தியின் மரணத்தில் மறைக்கப்பட்ட சம்பவங்களை வைத்து இந்த படத்தை உருவாக்கி இருக்கிறோம்.

கோட்சே காந்தியை சுட்டது இரண்டு புல்லட். ஆனால் அவரது உடலில் இருந்து எடுக்கப்பட்டது நான்கு புல்லட். இதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதை இதில் சொல்கிறோம்.

தமிழகத்தில் இந்து அறநிலையத்துறை ஆரம்பிக்கும் போது 42000 திருக்கோவில்கள் இருந்தன. ஆனால், இப்போது 22000 கோவில்கள் தான் இருக்கின்றன. இதன் மூலம் அழிக்கப்பட்ட கோவில்களின் உண்மை வரலாறு மட்டுமின்றி . இந்து, முஸ்லீம் பிரிவினையை தூண்டுவது அரசியல்வாதிகள் தான் என்பதை அழுத்தமாக சொல்லியிருக்கிறோம்.

இப்படி பல உண்மைச் சம்பவங்களை வைத்து உருவாகியுள்ள இந்த படம் மார்ச் 07 ஆம் தேதி சிவன் ஓடிடி, பரமசிவன் OTT என்று புதிய ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *