KollywoodNow

Tamil CInema Updates

விஜய் ஆண்டனி ஜோடியாக மிர்ணாளினி ரவி

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன், மீரா விஜய் ஆண்டனி தயாரிப்பில் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில், நடிகர்கள் விஜய் ஆண்டனி, மிர்ணாளினி ரவி நடிப்பில் வெளிவர இருக்கும் ‘ரோமியோ’ படத்தின் முதல் பாடல் ‘செல்லக்கிளி’ இன்று வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் மூலம் பரத் தனசேகர் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

பாடல் குறித்து அவர் பேசியிருப்பதாவது, “’செல்லக்கிளி’ பாடல் இந்தப் படத்தின் சாராம்சத்தை பிரதிபலிப்பது மட்டுமல்லாமல், எனது இதயத்திலும் தனி இடம் இந்தப் பாடலுக்கு உண்டு. இந்தப் பாடலுக்குத் திறமையான எனது குழு, முழு ஒத்துழைப்பையும் கொடுத்துள்ளது. இந்தப் பாடலின் ஃபைனல் ரிசல்ட் அற்புதமாக வந்துள்ளது. மனிதர்களின் உணர்வுகளை மட்டும் பிரதிபலிக்காமல் வலுவான அன்பையும் இது உணர்த்தும். மெல்லிசை, தாளம் மற்றும் உணர்ச்சி ஆழத்தாலும் அன்பின் வலிமையாலும் ரசிகர்களைக் கவர்ந்திழுப்பதை இந்தப் பாடல் நோக்கமாகக் கொண்டுள்ளது. கதைசொல்லலை மேம்படுத்தும் ஆற்றல் இசைக்கு உண்டு என்று நான் நம்புகிறேன். ’செல்லக்கிளி’ இந்த அனுபவத்தை பார்வையாளர்களுக்குக் கொடுக்கும்.

’ரோமியோ’ படத்திற்கு அறிமுக இசையமைப்பாளராக இருப்பது ஒரு சிறந்த கற்றல் அனுபவமாக இருந்தது. மேலும் முழு படக்குழுவினரும் வழங்கிய ஆதரவு மற்றும் வழிகாட்டுதலுக்கு நன்றி. இந்த வாய்ப்பு எனது கலை அடையாளத்தை வெளிப்படுத்தவும் இசையின் மூலம் கதை சொல்லும் முறையையும் எனக்கு கற்றுக் கொடுத்தது. ’செல்லக்கிளி’ பாடலுக்கு ரசிகர்கள் எப்படி வரவேற்புக் கொடுக்கப் போகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறோம். இந்த வாய்ப்புக்கு நன்றி. ’ரோமியோ’ படத்தின் வெற்றிக்கு எனது இசையும் முக்கிய காரணமாக இருக்கும் என்பதில் மகிழ்ச்சி” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *