சமர்வீர் கிரியேஷன்ஸ் சார்பில் குடூர் நாராயண ரெட்டி வழங்கும், இயக்குநர் யதா சத்யநாராயணா இயக்கத்தில், பாபி சிம்ஹா, வேதிகா நடிப்பில், சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில், ஹைதராபாத் நகரில் உண்மையில் நிகழ்ந்த, மறைக்கப்பட்ட வரலாற்று நிகழ்வை, அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் “ரஸாக்கர்”. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பான் இந்திய வெளியீடாக வெளியாகவுள்ள இப்படத்தின் தமிழ்ப் பதிப்பிற்கான டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
படத்தில் நடித்தது பற்றி நடிகை வேதிகா பேசியதாவது…
வாழ்த்த வந்துள்ள அனைவருக்கும் நன்றி. இந்தப் படத்திற்காக என்னை அழைத்தபோது எனக்கே உண்மையான வரலாறு தெரியாது. ஹைதராபாத் மாநிலத்திற்கு 1948 ல் தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. ஆனால் அது பலருக்கு தெரியாது. அந்த வரலாற்றின் உண்மையைச் சொல்லும் படத்தில் நானும் இருப்பது பெருமை. வரலாற்றுப் படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். நம் சுதந்திர வாழ்க்கைக்காக எத்தனை மனிதர்கள் தியாகம் செய்துள்ளார்கள், போராடியிருக்கிறார்கள் அவர்களின் கதையை இந்தப் படம் சொல்லும். தயாரிப்பாளர் குடூர் சார் பிரம்மாண்டமாக இப்படத்தை எடுத்துள்ளார், நன்றி. பாபி நேஷனல் அவார்ட் வின்னிங் ஆக்டர். அவரை இந்தப் பாத்திரத்தில் பார்த்த போது பிரமிப்பாக இருந்தது. அவருக்கு என்னை, மேக்கப்போடு பார்த்தபோது அடையாளமே தெரியவில்லை. அப்புறம் தான் கண்டுபிடித்தார். மிகச் சிறந்த நடிகர் அவருடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி. இயக்குநருக்கு என் சிறப்பு நன்றி. என்னுடன் வேலை பார்த்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. எப்போதும் போல் எனக்கும் படத்திற்கும் உங்கள் ஆதரவைத் தாருங்கள்
இந்து முஸ்லீம் ஒற்றுமைக்கு எதிரான படமா ரசாக்கர் ?