மலையாள திரையுலகம் எப்போதுமே தரமான திரைப்படங்களைக் கொடுத்து ரசிகர்களை கட்டிப்போட்டு வைப்பார்கள். அப்படி சமீபத்தில் வெளியாகிய்ருக்கும் திரைப்படம் மஞ்சும்மல் பாய்ஸ். இதனை சிதம்பரம் என்பவர் இயக்கியிருந்தார். இளம் நண்பர்களைப் பற்றிய கதை இது. படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது. அதோடு தமிழ்நாட்டிலும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் படக்குழுவினரை பலரும் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியில் தலைவருமான கமல்ஹாசன் படத்தைப் பார்த்து விட்டு படக்குழுவினரை வரவழைத்து பாராட்டினார்.
படக்குழுவினரை வாழ்த்திய கமல்ஹாசன்