KollywoodNow

Tamil CInema Updates

ஜின் – விமர்சனம்

சிங்கப்பூரில் நட்சத்திர விடுதி ஒன்றில் பேண்ட் பாடகராக இருக்கும் சக்தி (முகேன் ராவ்), இந்தியா வரும்போது, பழமையான பெட்டியை வாங்கிக்கொண்டு திரும்புகிறார். வீட்டில் உள்ள பலரும் அது என்ன பெட்டி எனக் கேட்க, அதற்குள் ‘ஜின்’ என்கிற அதிர்ஷ்டப் பேய் அடைக்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறார்.
முதலில் மிரண்டாலும் பின்னர், பிரியா (பவ்யா) என்கிற பெண்ணை, சக்தி திருமணம் செய்துகொள்ளச் சம்மதித்ததால் ஜின்னை ஏற்கிறார்கள். ஆனால், பிரியாவை ஒரு கும்பல் கொலை செய்யும் நோக்கத்தில் கொடூரமாகத் தாக்கிவிட்டுப் போக, அதன் பின் ஜின் மீது சந்தேகம் வந்து அது இருக்கும் பெட்டியைத் தூக்கி வெளியே வீசுகிறார் சக்தி. பெட்டிக்குள் இருந்த ஜின் வெளியே வந்ததா, பிரியாவை கொலை செய்ய முயன்றவர்கள் யார் என்பதையும் அதற்கான காரணம் என்ன என்பதையும் படத்தில் விளக்கியிருக்கிறார்கள்.
மலேசிய அரசர் அடைத்த ஜின் பேய் பற்றிய தகவல்களும், அது குறித்த விளக்கமும் சுவாராஸ்யமாக இருக்கிறது. ஆனால் அடுத்த காட்சியிலேயே அதை காமெடியாக கையாண்டு முழு படத்தையும் கார்டூன் படமாக மாற்றி விட்டார்கள். நல்ல ஆதமாவுக்கும், கெட்ட ஆத்மாவுக்கும் நல்ல ஆத்மாவுக்கும் நடக்கும் போராட்டம் சண்டை எல்லாவற்றிலும் கொஞ்சம்கூட சீரியஸ் தன்மை இல்லாமல் சிரிப்பு வருகிறது.ல் அந்த ஆத்மாக்களை வடிவமைத்த விதமும், அதை கையாண்ட காட்சிகளும் பொருந்தவில்லை.
முகேன் ராவ் பாடுகிறார். ஆடுகிறார். நடிப்பு வரவில்லை. காதலியாக வரும் பவ்யா, தனது வேலையைக் கச்சிதமாகச் செய்திருக்கிறார். வடிவுக்கரசி, வினோதினி ஆகிய இருவரும் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள். இமான் அண்ணாச்சி பால சரவணன் இருவரும் சிரிக்க வைக்க முயலுகிறார்கள். நடக்கவில்லையே கதையாக சொல்லும் போது புதிய களமாக இருந்தது. ஆனால் அதை திரைக்கதையாக்கியதில் கவனம் செலுத்தவில்லை டி.ஆர்.பாலா.
ஜின் – மயக்கம் இல்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *