KollywoodNow

Tamil CInema Updates

குட் டே”. ஜூன் 27 ஆம் தேதி வெளியாகிறது.

தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில், ஓர் இரவில் நடக்கும் காமெடி, கலந்த உணர்வுப்பூர்வமான, சமூக படைப்பாக உருவாகியுள்ள படம் “குட் டே”. ஜூன் 27 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வினில்….

நடிகர் கலை இயக்குநர் விஜய் முருகன் பேசியதாவது…
இந்தப்படம் மிகச் சுவாரஸ்யமான படம், மிக நல்ல கதை. படம் பார்த்து விட்டேன் பிரித்திவி மிக அழகாகச் செய்துள்ளார். ஒரு இரவில் நடக்கும் கதை.உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் அனைவருக்கும் நன்றி.

ஜீவா சுப்பிரமணியம் பேசியதாவது…
இந்தப்படத்தில் எனக்கு வித்தியாசமான கதாப்பாத்திரம். இதுவரைக்கும் சேலை கட்டிக்கொண்டு நடித்திருக்கிறேன், ஆனால் இதில் எனக்கு வித்தியாசமாக போலீஸ் உடை தந்தார்கள். ஆடிசனில் எனக்கு போலீஸ் டிரெஸ் தந்தார்கள், எங்கே என்னை தேர்ந்தெடுக்க மாட்டார்களோ என நினைத்தேன், என் மேல் நம்பிக்கை வைத்ததற்கு நன்றி. படப்பிடிப்பில் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார்கள். எனக்கு வித்தியாசமான கதாப்பாத்திரம் தந்த இந்த “குட் டே” படக்குழுவிற்கு நன்றி. சிவகார்த்திகேயன் அண்ணா சூப்பர்ஸ்டார் எல்லாம் இப்போது வரும் படங்களுக்கு ஆதரவு தருகிறீர்கள், அதுபோல எங்கள் படத்தையும் பார்த்து ஆதரவு தாருங்கள். நீங்கள் தரும் ஆதரவு மிகப்பெரிது. அனைவருக்கும் நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *