கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே.நாராயணா தயாரிப்பில், இயக்குநர் பிரேம் இயக்கத்தில், ஆக்சன் பிரின்ஸ் துருவ் சர்ஜா, சஞ்சய் தத், ஷில்பா ஷெட்டி நடிப்பில் பிரம்மாண்ட ஆக்சன் படமாக உருவாகியுள்ள திரைப்படம் *கேடி தி டெவில்
நடிகர் சஞ்சய் தத் பகிர்ந்து கொண்டதாவது…
சென்னையில் இருப்பது மகிழ்ச்சி. தமிழ்ப்படங்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். லோகேஷ் இயக்கத்தில் நடித்துள்ளேன், ரஜினி சாருடன் நான் நிறைய இந்திப் படம் நடித்துள்ளேன். கமல் சார் படங்களும் பிடிக்கும். கேடி படத்தைப் பொறுத்தவரை மிக அற்புதமான அனுபவமாக இருந்தது. படக்குழுவினர் என்னை மிக அன்போடு பார்த்துக்கொண்டார்கள், இது அட்டகாசமான மாஸ் ஆக்சன் படம், துருவ் சர்ஜா நன்றாக நடித்துள்ளார், அனைவருக்கும் படம் பிடிக்குமென நம்புகிறேன் நன்றி.
கேடி தி டெவில் திரைப்பட தமிழ் டீசர் வெளியிட்டு விழா