சமீப காலத்தில் மக்கள் நேரடியாக சந்தித்து வரும் அடுக்குமாடி குடியிருப்பு வாழ்க்கையும் அதனால் ஏற்படும் ஏமாற்றமும் எபடியெல்லாம் அவர்களை பாதிக்கிறது என்பதை ஒரு த்ரில்லர் கலந்து சொல்லப்பட்டிருக்கும் படம் இது.
பிரபல எழுத்தாளர் ஒருவர் முகமூடி அணிந்த மர்ம நபரால் கொலை செய்யப்படுகிறார். இந்த கொலை வழக்கை போலீஸ் இன்ஸ்பெக்டர் அர்ஜூன் விசாரிக்கிறார். ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளியின் ஆசிரியையான ஐஸ்வர்யா ராஜேஷ் திருமண வலைத்தளம் மூலம் பெண் தேடும் பிரவீன் ராஜாவுக்கு விருப்பம் தெரிவிக்கிறார். அவரைப் பற்றி முழுசாக தெரிந்து கொள்ள நெருக்கமாக பழகு கிறார்.
இன்னொரு பக்கம் போலீஸ் அதிகாரி அர்ஜூன் மேற்கொண்ட விசாரணையில் கொடூர கொலைக்கும், ஐஸ்வர்யா ராஜேஷின் காதலர் பிரவீன் ராஜா வசிக்கும் அடிக்குமாடி குடியிருப்புக்கும்தொடர்பு இருப்பதை கண்டுபிடிக்கிறார்.
அது தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்தும் போது, மேலும் ஒருவர் அதே நபரால் கொல்லப் படுகிறார். யார் அந்த மர்ம நபர்? கொலைகளுக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கும் உள்ள சம்பந்தம் என்ன? ஐஸ்வர்யா ராஜேஷுக்கு இந்த கொலை பின்னணியில் தொடர்பு உண்டா?, என்ற பல கேள்விகளுக்கு திகிலுடனும் சஸ்பென்ஸ் வைத்தும் விடை கொடுக்கிறார் இயக்குனர் தினேஷ் லக்ஷ்மணன்
வேல.ராமமூர்த்தியிடம் தற்காப்புக் கலைகள் கற்றுக்கொண்ட மீரா – குறட்டை நோயால் அவதிப்படுபவர்களை நன்கு தூங்க வைக்கும் உயிர்க்காற்று கருவியைப் பொறுத்தும் பணியில் இருக்கும் பிரவீன் ராஜா ஆகிய மூன்று கதாபாத்திரங்கள் ஆக்ஷன் கிங்கின் விசாரணை வளையத்துக்குள் வரும்போது கதை திரைக்கதை வேகமெடுக்கிறது.
க்ளைமேக்ஸ் காட்சியும் அதற்கு முன்பாக நடக்கு துரத்தல் காட்சியும் சிறப்பாக இருக்கிறது.
ஐஸ்வர்யா ராஜேஷின் ஆக்ஷன் அர்ஜூனின் மதிநுட்பம் இரண்டும் படத்தின் விறுவிறுப்புக்கு உதவுகிறது.
இசையமைப்பாளர் பாரத் ஆசீவகன் இசையில் பாடல்கள் ஓ.கே ரகம். பின்னணி இசை, காட்சிகளுக்கு பலம் சேர்த்துள்ளது.
சரவணன் அபிமன்யுவின் ஒளிப்பதிவும், லாரன்ஸ் கிஷோரின் படத்தொகுப்பும் பார்வையாளர்களின் திரில் அனுபவத்தை அதிகரிக்க உறுதுணையாக இருந்துள்ளன.
தீயவர் குலை நடுங்க – திரைக்கதையில் வலு இல்லை
தீயவர் குலை நடுங்க – விமர்சனம்