ARK PRODUCTIONS சார்பில் ராமகிருஷ்ணன் ஆறுமுகம் மற்றும் ECOPMIN MOTION PICTURES சார்பில் வினோத் பெருமாள் இருவரும் இணைந்து பிரமாண்டமாக தயாரிக்கும் படத்திற்கு ” ஊருக்கு ரெண்டு ஊதாரி ” என்று கலகலப்பான தலைப்பை வைத்துள்ளனர்.
பிரபல நடிகர்கள் பிரஜின், புகழ் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர்.
பிக் பாஸ் மூலம் மக்களிடையே பிரபலமாகி ‘லியோ’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஜனனி இந்தப் படத்தின் கதாநாயகியாக நடிக்கிறார்.
இவர்களுடன் விக்ரம் விஜய் முக்கியம் கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார். மற்றும் ரவிமரியா, மைம்கோபி, தீபா அக்கா, அபிதா ஆகியோர் நடிக்கிறார்கள்.
பிரபல இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா இந்த படத்திற்கு இசையமைக்க, பியார் பிரேமா காதல், கழுகு 2, நான் மிருகமாய் மாற, நினைவெல்லாம் நீயடா போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பை செந்தமிழ் செல்வன் செய்ய, கலை இயக்கத்தை மணிகண்டன் கையாள்கிறார்.
படம் பற்றி இயக்குனர் யோகேஸ்வரன் மைனர் பேசியவை…
இது முழுக்க முழுக்க காமெடி ட்ராமாவாக உருவாக்க இருக்கிறோம்.
பொதுவாகவே ஊருக்கு ரெண்டு ஊதாரி இருப்பார்கள், ஆனால் ஒரே வீட்டில் ரெண்டு ஊதாரி இருந்தால் என்ன நடக்கும் என்பதை வைத்து சுவாரஸ்யமான முழு நீள காமெடி படமாக எடுக்கவிருக்கிறோம்.
கடந்த பத்து வருடங்களாக ஒரே அடிதடி, வெட்டு குத்து படங்களாகவே வருகின்றன. சினிமா ரசிகன் அந்த இரண்டு மணிநேரம் தன்னை மறந்து சிரித்து மகிழவேண்டும் என்று தான் எதிர் பார்க்கிறாரன். அப்படி சினிமா ரசிகனை ஃபுல் என்டர்டெயின்மென்ட் செய்யும் படமாக இது இருக்கும் என்றார் இயக்குனர் யோகேஸ்வரன் மைனர்.
இந்த படத்தின் துவக்க விழா இன்று ( 05.02.2026 ) காலை சென்னையில் நடைபெற்றது விழாவில் நடிகர் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, C.V. குமார், KKR சினிமாஸ் K. ரமேஷ் பாண்டியன், சுப்ரமணியசிவா ஆகியோர் கலந்துகொண்டு துவக்கி வைத்தனர்.
படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தேனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற உள்ளது.இந்த வருட கோடை கொண்டாட்டமாக இந்த படத்தை வெளியிட இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.