முனீஸ்காந்த் மற்றும் மலையாளத்தின் குணச்சித்திர நடிகர்களில் ஒருவரான ராஜேஷ் மாதவன் ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, சுபாஷ் செல்வம் கதாநாயகனாக நடித்திருக்கும் ‘காக்கி சர்க்கஸ்’ நேரடித் தமிழ் இணையத் தொடர் மூலம் தமிழில் இயக்குநராகக் கால் பதித்திருக்கிறார் அமீன் பாரீஃப்.
ஜீ5 தளத்தின் அசல் உள்ளடக்கங்களில் சமீப காலமாகக் குறைந்த பட்ஜெட்டில் நல்ல கதையம்சத்துடன் கூடிய இணையத் தொடர்கள் வெளிவந்தபடி இருக்கின்றன. கடந்த பிப்ரவரியில் சமுத்திரக்கனி நடிப்பில் நவீன்குமார் பழனிவேல் எழுத்து இயக்கத்தில் ‘தடயம்’ வெளியானது. நல்ல கதை, நடிக்கத் தெரிந்த நடிகர்களின் தரமான பங்களிப்பு என அந்தத் தொடர் ஈர்த்தது. தற்போது அதே பாணியில் குறைந்த பட்ஜெட்டில் நிறைவான திரை அனுபவம் தரும் தொடராக ‘காக்கி சர்க்க’ஸை கொடுப்பதில் அமீன் பாரீஃப் வெற்றிபெற்றாரா என்று பார்ப்போம்.
காதல், பலவீனம், புத்திசாலித்தனம், ஆக்ஷன் என அர்ஜுன் கதாபாத்திரம் மூலம் முக்கிய தருணங்களை நடிப்பில் நன்றாகவே கொண்டு வந்திருக்கிறார் சுபாஷ் செல்வம்.
சிறை கண்காணிப்பாளர் கதாபாத்திரத்தில், முனீஷ்காந்த் தனது வழக்கமான நகைச்சுவை நடிப்பினை கொடுத்திருக்கிறார்.
பஸ்கண்டக்டராகவும், திருடனாகவும் நடித்திருக்கும் ராஜேஷ் மாதவன், அவரது காதலியாக நடித்திருக்கும் கௌதமி நாயர் இருவரும் பொருத்தமான நடிப்பினை கொடுத்துள்ளனர்.
சாவித்ரி, அம்ருதா, அப்துல் லீ, மருதுபாண்டியன், ராகேஷ், உசர், விக்னேஷ்வர், அருண்குமார் உள்ளிட்ட தொடரில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் கதாபாத்திரங்களுக்கு பொறுத்தமான தேர்வாக பயணித்து பலம் சேர்த்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் நீரஜ் ரவி, சிறைச்சாலையின் இயல்பான சூழலை நம்பகமாக பதிவு செய்துள்ளார். இசையமைப்பாளர்கள் சேவியர் மற்றும் விபின் பாஸ்கர், கதையின் ஓட்டத்திற்கு ஏற்ப பின்னணி இசையை வழங்கியுள்ளனர்.
வித்தியாசமான கதைக்களம் விறு விறுப்பான திரைக்கதை எல்லாமும் சேர்ந்து சிறப்பாக இருக்கிறது.
காக்கி சர்க்கஸ் – விமர்சனம்