KRG Kannan Ravi Group சார்பில் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி தயாரிப்பில், உமாபதி ராமையா இயக்கத்தில், நட்டி நட்ராஜ் நாயகனாக நடிக்க, பரபரப்பான பொலிடிகல் காமெடி கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள திரைப்படம் “TN 2026” தங்க நட்சத்திரம். இப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி திரை ரசிகர்கள் மட்டுமல்லாது பொதுமக்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், அரசியல் மாநாடு போல வடிவமைக்கப்பட்ட பிரம்மாண்ட அரங்கில், கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்வினில்…
ஒளிப்பதிவாளர் P. G. முத்தையா பேசியதாவது..,
நான் நடுவில் சில காலமாக ஒளிப்பதிவு செய்யவில்லை தம்பி ராமையா சார் தான் முதலில் இந்த படத்துக்கு என்னை கூட்டி வந்தார். அதற்குப் பிறகு தான் நான் தொடர்ந்து படங்களுக்கு கமிட்டாக ஆரம்பித்தேன். இந்த படத்தைப் பொறுத்தவரையில், நாங்கள் ஒரு பிரம்மாண்டமான விஷுவல்ஸ் கொடுத்திருக்கோம். அதே நேரத்தில், ஒரு ஸ்மார்ட்டான டைரக்டருடன் வேலை செய்தது எனக்கு ஒரு நல்ல அனுபவம். இந்த படத்தில் நடித்த ஹீரோ நட்டி, அவர் ஏற்கனவே ஒரு பெரிய சினிமாடோகிராஃபர். அவருடைய படங்களை தொடர்ந்து தமிழில் ரீமேக் செய்திருக்கேன். அதனால் அவருடன் வேலை செய்வது ஆரம்பத்தில் கொஞ்சம் தயக்கமாக இருந்தது. ஆனால் ஒவ்வொரு இடத்திலும் அவர் எனக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக இருந்து உதவினார். அனைவருக்கும் நன்றி.