மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.N.ஆனந்த் MLA அவர்கள் சென்னை மேற்கு மாம்பலத்தில, உள்ள அங்கன்வாடி மையத்திற்கு நேரில் சென்று, அங்குள்ள குழந்தைகளுடன் அன்போடு நேரம் செலவிட்டார்.
குழந்தைகளின் கல்வி, ஊட்டச்சத்து மற்றும் நலன் தொடர்பான அம்சங்களை கேட்டறிந்த மாண்புமிகு அமைச்சர் அவர்கள், அவர்களுடன் கலந்துரையாடி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். மேலும், அங்கன்வாடி மையத்தின் செயல்பாடுகளையும் பார்வையிட்டு, குழந்தைகளுக்கான சேவைகள் சிறப்பாக வழங்கப்படுவதை உறுதி செய்தார்.