வித்தியாசமான கதைக்களம் விவகாரமான மனிதர்கள் என்று கிழக்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் வாழ்ந்து வரும் மக்களின் வாழக்கைப் போராட்டத்தை சொல்ல வந்திருக்கும் படம், இந்தப்பகுதியில் வாழும் மக்கள் வானம் பார்த்த பூமியாக மாறிய இடத்தில் வருமத்திற்கு வழி இல்லாமல் செம்மரம் வெட்ட செல்கிறார்கள். இன்னும் சிலரை சில அரசியல்வாதிகள் கூலிப்படையினராக வைத்துக்கொள்கிறார்கள்.
அப்படி ஒரு கூலிப்படையாக இருப்பவர்தான் ஹீரோ ராஜன் தேஸ்வர். ஹீரோயின் தந்தையை கொல்லும் சூழல் வருகிறது. அவர் ஒரு பொதுவுடமைவாதி. அரசியல் பின்புலம் உள்ளவர். இதனால் நாயகி ஐரா தனது தந்தையை கொன்றவனை தேடி, ஹீரோவை பிடிக்கிறார். ஆனால் அவனது செயலுக்குப் பின்னால் இருக்கும் நபர்களையும் பார்த்து ஹீரோவுக்கு ஆதரவாக நிற்கிறார். இவர்கள் காதல் ஒன்று சேர்ந்ததா, கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் வசிக்கும் மக்களின் நிலை என்னாவாகிறது என்பதை வித்தியாசமான திரைக்கதையில் சொல்லியிருக்கிறார் இயக்குனர்
முதல்பட நாயகன் போல அல்லாமல் ராஜன் தேஸ்வர் நல்ல நடிப்பைக் கொடுத்திருக்கிறார். அவரது முரட்டு தோற்றமும், ஆகஷன் காட்சிக்கு கைக்கொடுக்கிறது. சண்டைக் காட்சிகளில் அசாத்திய வேகம் காட்டுக்கிறார். நாயகி ஐராவும் தன் கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார்.
சாய் தீனா, ஜார்ஜ் மரியான், நாகி நீடு ஆகியோர் கதைக்கு வலு சேர்த்திருக்கிறர்கள்.
சண்டைப்பயிற்சி இயக்குநர் மிராக்கிள் மைக்கேல் படத்தில் முக்கிய பங்கு வகித்திருக்கிறார். படத்தொகுப்பாளர் ஆர்.ஸ்ரீராமர் ஓளிப்பதிவாளர் பரத் ஆகியோர் இயக்குனர் கதைக்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள்.
அமரம் – காவியம் .
அமரம் – விமர்சனம்