பிரபுவின் மகள் நயன் தாரா அம்மா கைவிட்ட பிறகு அப்பாவுடன் வளர்ந்து வருகிறார். பிரபு தன் மனைவி பிரிந்த சென்ற சோகத்தில் மது குடிப்பவராக மாறிவிடுகிறார். நயன் தாராவை விருப்பம் இல்லாத ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க முயற்சிக்க, நயன் தாரா அங்கிருந்து சென்னைக்கு வந்து விடுகிறார்.
கவின் தான் காதலித்த உறவுக்கார பெண் அவரை அவமதித்து அனுப்ப, உடனே அவரை திருமணம் செய்து கொள்ளச் சொல்லி அப்பா பாக்யராஜ் அவசரப்படுத்துகிறார். இதனால் அங்கிருந்து கவின் சென்னை வந்து விடுகிறார்.
இப்படி வாழ்க்கையில் இருவேறு சம்பவங்களில் பாதிக்கப்பட்ட இருவரும் ஒரே வீட்டில் வசிக்கும் சூழல் வருகிறது. நயன், கவின் இருவருக்குள்ளும் நட்பு உருவாகிறது.
இந்த நிலையில் நல்ல நண்பர்களாக பழகி வரும் இருவருக்கும் க்டுபங்களின் ஆதரவும் கிடைக்கிறது. நயன் மீது கவினுக்கு காதல் ஏற்பட, அதைச் சொன்னால் எங்கே தன்னை நிராகரித்து விடுவாரோ என்று தயக்கம் காட்டி பழகுகிறார்.
இருவருக்கும் எப்படி திருமணம் நடக்கிறது என்பதை ஜனரஞ்சகமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் எடவன்.
நயன் தாரா வழக்கம்போல பல இடங்களில் ஸ்கோர் செய்து விடுகிறார். அப்பா பிரவுவை பார்த்து கலங்கும் காட்சி, கவின் தனக்காக அம்மாவை தேடி சென்றது போன்ற இடங்களில் நெகிழ வைக்கிறார். அவருக்கு இந்த படம் இன்னொரு முத்திரை.
கவின் இயல்பான முகத்தோற்றத்துடன் நடித்திருக்கிறார்.அவருக்கு நடிக்க நல்ல ஸ்கோப் இருக்கும் பாத்திரம். அதையும் நல்லபடியாக காப்பாற்றியிருக்கிறார்.
ராதிகா, பாக்யராஜ், பிரபு சுகாசினி, ஆதித்ய கதிர் ஆகியோர் தங்கள் பங்கை நிறைவாக செய்திருக்கிறார்கள்.
பீல் குட் மூவியாக வந்திருப்பது சற்று ஆறுதல் அளிக்கிறது. படத்தில் பெரிய அளவில் சஸ்பென்ஸ் இல்லாததும், திருப்பம் இல்லாமல் இருப்பது பலவீனம்.
ராஜேஷ் சுக்லா ஒளிப்பதுவும் ஜென் மார்ட்டினின் இசையும் படத்தின் கதையோட்டத்திற்கு ஏதுவாக இருக்கிறது.
குடும்பத்தோடு பார்க்க வைக்கும் படமாக இருக்கிறது ஹாய்
ஹாய் – விமர்சனம்