டாக்சிக் – விமர்சனம்
இந்திய சினிமாவில் பெரிய பட்ஜெட்டில் தயாரான படம். பெரிய எதிர்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் இது. யாஷ் முதன்மை பாத்திரத்தில் வரும் படத்தைன் கதையே செண்டிமெண்ட் தான். கே.ஜி.எப் படத்தில் அம்மா இந்தப்படத்தில் அக்கா செண்டிமெண்ட். அக்காவாக நயன் தாரா. வறுமையால் வளர்ந்த சிறுவன் தன் அம்மாவிற்கு ஏற்பட்ட வேதனையை யும், மரணத்தையும் பார்த்து நின்ராஆண். பசிக்காக அக்கா தன்னையே விற்றதை கண்டு கலங்கியவன், வளர்ந்து பெரிய டான் ஆகிறான்.
கோவாவில் போர்த்துக்கீசியர்கள் போதைப்ப்ருள் கடத்தலின் கூடாரமாக கோவாவை மாற்றியிருக்கிறார்கள். அதில் தலைவனாக இருப்பவர் சல்வடார். ராயன் எப்பேர்பட்ட செயலையும் செய்ய தாயாராகும் நபராக யாஷ். சல்வடார் தங்கை ரெபேக்காவை காதலித்து வருகிறார். இந்த நிலையில் கியாரா அத்வானியை சந்திக்கும் யாஷ் அவரது அழகில் சொக்கிக்கிடக்கிறார். ஆனால் சல்வடார் ராயாவை எச்சரிக்கிறார். கியாராவா, ரெபேக்காவா என்ற காதலில் யாஷ் யாரை தேர்வு செய்கிறார் என்பதும், கோவாவில் போதை பொருட்களின் உலகத்தில் இஅவர் எப்படி பெரிய ஆளாக மாறுகிறார் என்பதையும் ஹைடெக் ஆக்ஷன் காட்சிகளின் இடையே காட்டியிருக்கிறார் இயக்குனர் கீது மோகந்தாஸ்.
யாஷ் முழு ஆக்ஷன் பேக்குடன் வந்திருக்கிறார். வித்தியாசமான ஹேர் ஸ்டைல் வாயில் எப்போதும் புகையும் சுருட்டு என்று ஆள் அட்டகாசமாக இருக்கிறார். ஆக்ஷன் காட்சிகள் அவருக்காகவே உருவாக்கியது போலவே இருக்கிறது. இந்தப்படத்தில் கூடுதலாக பெண்களோடு உடல் பசியை தீர்த்துக்கொள்ளும் காட்சிகளும் அதிகம்.
யாஷ் ஆக்ஷன், நடிப்பு, அக்கா நயன் தாராவுக்காக உருகும் இடங்கள் என்று எல்லாமே அசத்தலாகவே இருக்கிறது. ஆனால் திரைக்கதைல் அழுத்தமாக காரணமும் உணர்வுப்பூர்வமான காட்சியமைப்பும் இல்லாததால் எல்லாவே வீணாக தெரிகிறது, ஆனாலும் ரசிகர்கள் கொண்டாடத்தான் செய்வார்கள்.
நயன் தாரா அமைதியாக வந்து அமர்க்களமாக நடித்திருக்கிறார். அவரது காட்சிகள் ரசிக்க வைக்கிறது. சர்க்கஸ் கூடாத்தின் பின்னணியில் வரும் கியாரா அத்வானி ரசிகர்களுக்கு விநுது வைத்திருக்கிறார்.
படத்தின் ஒவ்வொரு காட்சியும் பிரமாண்டமாக இருக்கிறது. வியந்து போய் பார்க்கிறோமே தவிர, காட்சிக்குள் நம்மை கொண்டு செல்லும் திரைக்கதை இல்லை.
படத்தின் பிரமாண்டத்திலேயே நம்மை கட்டிப்போட்டு விடுகிறார்கள். ரவி பஸ்ரூரின் பின்னணி இசை அலற வைக்கிறது. கூடவே விஷால் மிஷ்ரா,டானிக்ஷ் பக்ஷி இருவரும் இசையில் பங்கெடுத்துகிறார். ராஜீவ் ரவி ஒளிப்பதிவு கைகொடுத்திருக்கிறது. உஜ்வால் குல்கர்னி எடிட்டிங் சிறப்பாக இருக்கிறது. குணால் சர்மாவின் சவுண்ட் டிசைன் பாராட்டுக்குரியது.
ஆகஷ்ன் மசாலாவுக்குள் கதை காணாமல் போயிருக்கிறது.
டாக்சிக் – மிரட்டல்
டாக்சிக் – விமர்சனம்