KollywoodNow

Tamil CInema Updates

ஜெயிலர் 2 – விமர்சனம்

ஜெயிலர் தனது மகனை தானே சுட்டுக் கொன்ற பிறகு, குடும்பத்தோடு அமைதியான முறையில் வாழ்ந்து வருகிறார். ஆனால் கவுன்சிலர் மூலம் ஆரம்பிக்கும் சின்ன தகராறு மிகப்பெரிய சிலைக்கடத்தில் கும்பலோடு மீண்டும் மோதும் சூழலை உருவாக்கி விடுகிறது.
நகராட்சி அதிகாரிக்காக வக்காலத்து வாங்கி வரும் அரசியல் பிரமுகம் ரஜினியை தனக்கு ஓட்டுனராக வைத்துக்கொள்கிறார். அதன் பிறகு வர்மனின் மரணத்திற்கு காரணமானவரை தேடி அலையும் சுராஜ் ரஜினியை சந்திக்க, மோதல் தொடங்குகிறது. கல்பக் என்ற தலைமை டான் எஸ்.ஜே.சூர்யாவை சந்திக்கப் போகிற அந்த ட்ராவல்தான் முழுப்படமும்.
ரஜினிகாந்த் சும்மா தெறிக்க விட்டிருக்கிறார். ஸ்டைலும், ஆக்ஷனும் அமர்க்களப்படுகிறது. அமைதியான அந்த முகத்தில் அதிர விடும் திரைக்கதையும் கைக்கொடுக்க படம் ஜெட் வேகத்தில் பயணிக்கிறது. க்ளைமேக்ஸ் காட்சியில் பேசும் அந்த வசனம் பேசும்போது தியேட்டர் அதிருகிறது.
ரஜினியோடு தோள் கொடுக்க குணச்சித்திர பாத்திரங்களை இயக்குனர் நெல்சன் உருவாக்கியிருப்பதுதான் படத்தின் பலம்.
நமோநாராயணன் சுராஜ், யோகிபாபு வரும் காட்சிகள் சிரிப்பு சரவெடியாக ஏரியா அலறுகிறது.
மோகன்லால், மிதுன் சக்ரவர்த்தி, சிவராஜ்குமார், விஜய் சேதுபதி உடபட பலரையும் சரியான இடத்தில் பயன்படுத்தியிருப்பது சிறப்பு. ஆனாலும் முதல் பாகம் போல் இல்லாமல், முழவதும் ரஜினியை மையமாக வைத்தே முழு திரைக்கதையும் இயங்குவது நெல்சன் சுதாரித்துக்கொண்ட தருணம்.
பாட்ஷா, அண்ணாமலை காலத்து ரஜினியை கண் முன் நிறுத்தியிருக்கிறார் இயக்குனர். படத்திற்கு பெரிய பலம் அனிரூத் இசை. பாடல்கள் சுமார் ரகம்தான்.
பூர்ணா, நோரா பதேஹி பாடல்கள் கைதட்டல் ரகம்.
வித்யா பாலனை வைத்து நடக்கும் காட்சிகள் அசத்தல்.
விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவும், ஆர்.நிர்மல் எடிட்டிங் படத்திற்கு பொருத்தமாக அமைந்துள்ளது.
ரஜினி படங்கள் என்றாலே கலகலப்பும், சண்டைக்காட்சிகளும்தான் அதை நன்றாகவே புரிந்து வைத்துக்கொண்டு இந்த முறை அனைத்து தரப்பும் கொண்டாடும் படமாகக்கொடுத்திருக்கிறார் இயக்குனர் நெல்சன்.
ஜெயிலர் 2 – அட்டகாசம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *