கதை ; பள்ளிப் படிப்பின் போது காதலிக்கும் இருவர் சந்தர்ப்ப சூழலால பிரிய நேர்கிறது. காதலி அமெரிக்காவிற்கு செல்கிறார். காதலன் ஹீரோ அவள் நினைவால் வாடுகிறார். ஒரு கட்டத்தில் அவருக்கு வீட்டில் மாமன் மகளை திருமணம் செய்து வைக்கிறார்கள். ஆனால் இது தெரியாமல் நாயகனை நினைத்து திருமணம் செய்யாமல் காத்திருந்து இந்தியா திரும்புகிறார் காதலி. இருவரும் சந்தித்துக் கொள்கிறார்கள். அடுத்து என்ன நடக்கிறது என்பதை இயுக்குனர் ஆதிராஜன் தனது திரைக்கதையில் விளக்குகிறார்.
நடிப்பு ; நாயகன் பிரஜின் பாத்திரம் அறிந்து நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சில இடங்களில் சீரியல் டைப். சில இடங்களில் இயல்பை மீறியும் இருக்கிறது. மனிஷா யாதவ் சினாமிகா, யுவலட்சுமி ஆகியோரின் பங்கு கவனிக்க வைக்கிறது. ரெடின் கிங்ஸ்லி, மனோபாலா ஆர்.வி.உதயகுமார் ஆகியோர் தங்கள் பங்கை நிறைவாக செய்திருக்கிறார்கள்.
இயக்கம் ; இன்றைய சினிமாவின் தன்மை தெரியாமல் எடுக்கப்பட்டிருக்கும் பழையபாணி படம். ஆங்காங்காங்கே காதல் ரசம். தொலைகாட்சி தொடரின் பாதிப்பு நிறைய இடங்களில் தெரிகிறது. ஆதிராஜன் திரைக்கதையில் இன்னும் மெனக்கெட்டிருக்கலாம்.
இசை ; பழைய பாணியிலான பாடல்கள் பின்னணி இசை கவனிக்க வைக்கிறது. இசை இளையராஜா.
ஒளிப்பதிவு ; ராஜா பட்டாச்சார்யாவின் ஒளிப்பதிவு கொடுத்த பணத்திற்குள் அடங்கியிருக்கிறது.
பிற கலைஞர்கள் ; பாடல்கள் இளையராஜா, பழநிபாரதி, சினேகன் சண்டை பிரதீப் தினேஷ்.
ரிசல்ட் ; புளித்த மாவில் சுட்ட தோசை