சாந்தி டாக்கீஸ், தயாரிப்பாளர் அருண் விஸ்வா தயாரிப்பில் நடிகர் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘3 BHK’ திரைப்படம் ஜூலை 4 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. ‘8 தோட்டாக்கள்’ புகழ் ஸ்ரீ கணேஷ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். அழகான உணர்வுகளுடன் அன்றாடம் நம் வாழ்வில் நடக்கும் சம்பவங்களைக் கொண்டு இதயத்தைத் தொடும் கதையாக இந்தப் படம் உருவாகியுள்ளது. சித்தார்த், சரத்குமார், தேவயாணி, யோகிபாபு, மீதா ரகுநாத், சைத்ரா உள்ளிட்டப் பலர் இதில் நடித்துள்ளனர்.
இயக்குநர் ராம், “ஜூலை 4 எனக்கும், சித்தார்த், அருண் மூவருக்கும் முக்கியமான நாள். இந்தப் படத்தின் தயாரிப்பாளர் அருண் விஸ்வா எனது அசிஸ்டெண்ட்டாக இருந்தார். ‘தங்க மீன்கள்’ படம் நான் எடுத்த சமயத்தில் அருண் என்னிடம் வந்தார். அவர் வந்ததும் எங்களுக்கு நம்பிக்கை வந்தது. ‘தங்க மீன்கள்’ வெளியாகுமா இல்லையா என்று இருந்த சமயத்தில் பலரும் என்னை விட்டு போனாலும் அருண் என்னுடன் தொடர்ந்து பயணித்தார். அவர் மூலமாகதான் கோடம்பாக்கத்தில் பலருடைய அறிமுகம் எனக்குக் கிடைத்தது. அவரைப் பார்த்தாலே எனக்கு உற்சாகம் பிறக்கும். அவருக்கு ஆல் தி பெஸ்ட்! தமிழில் முக்கிய படங்களைத் தயாரிப்பது மட்டுமல்லாது இயக்கவும் செய்வார் அருண். ’கற்றது தமிழ்’ ரிலீஸான பிறகு என்னிடம் பேச நினைத்த ஒரே ஹீரோ சித்தார்த். அவரை மிகவும் அகங்காரமானவர், எதிராளியின் மனதைப் பார்க்காமல் பேசி விடுபவர் என்ற பிம்பம் எல்லோரிடமும் இருக்கிறது. ஆனால், அவர் வளர்ந்த குழந்தை. அவர் படத்துக்கு வாழ்த்துக்கள். ’எட்டுத் தோட்டாக்கள்’ எனக்கு மிகப்பிடித்த படம். அவருக்கும் வாழ்த்துக்கள். தேவயாணி, சரத்குமார் இருவரும் நடிப்பில் மிரட்டுபவர்கள். படத்திற்கு வாழ்த்துக்கள்”
’கற்றது தமிழ்’ ரிலீஸான பிறகு என்னிடம் பேச நினைத்தவர் சித்தார்த் – ராம்