KollywoodNow

Tamil CInema Updates

நாகத்தை மையமாக வைத்து உருவான பல படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன

புராணக் கதைகள், மர்மங்கள் மற்றும் பிரம்மாண்டமான ஆக்சன் காட்சிகளின் கலவையாக உருவாகியுள்ள பான்-இந்தியா திரைப்படம் “நாகபந்தம்”. இயக்குநர் அபிஷேக் நாமா இயக்கத்தில், இளம் நடிகர் விராட் கர்ணா கதாநாயகனாக நடிக்கும் இப்படம், இந்திய சினிமாவில் இதுவரை இல்லாத அளவிலான காட்சியமைப்புகள் மற்றும் தொழில்நுட்ப பிரம்மாண்டத்துடன் உருவாகியுள்ளது.

வரும் ஜூலை 3 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிககையாளர் சந்திப்பு இன்று சென்னையில் படக்குழுவினர் மற்றும் பத்திரிககை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் படக்குழுவினர் கலந்து கொண்டு, படத்தை உருவாக்கிய பயணம், பிரம்மாண்டமான தயாரிப்பு அம்சங்கள், மிதாலஜிக்கல் உலகத்தின் தனித்துவம் மற்றும் ரசிகர்களுக்காக காத்திருக்கும் திரை அனுபவம் குறித்து படக்குழு பகிர்ந்து கொண்டனர்.

கலைப்புலி எஸ். தாணு பேசியதாவது…

“நாகபந்தம் படத்தின் காட்சிகளைப் பார்த்தபோது, மிகப்பெரிய பிரம்மாண்டம் கண்ணெதிரே தோன்றியது. படத்தின் ஒவ்வொரு காட்சியும் அதன் உழைப்பையும், தரத்தையும் வெளிப்படுத்துகிறது. இந்த விழாவில் கலந்து கொண்டிருக்கும் பத்திரிககை, ஊடக நண்பர்கள் மற்றும் திரையுலக நண்பர்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்கள்.

தயாரிப்பாளர் அபிஷேக் நாமா அவர்கள் இந்தப் படத்தை மிகுந்த அர்ப்பணிப்புடன் உருவாக்கியிருக்கிறார். அவருடன் எனக்கு நீண்டகால நட்பு உள்ளது. அன்பின் காரணமாகவே என் வேலைகளை ஒதுக்கிவிட்டு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருக்கிறேன்.

ஒரு சிறிய சம்பவத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். பல ஆண்டுகளுக்கு முன்பு நான் வெளியிட்ட ‘அமுதவல்லி’ திரைப்படத்தின் விளம்பரத்தில், ஒரு நாகப்பாம்பு, ஒரு குழந்தை மற்றும் ‘பாம்பு குழந்தையை கொஞ்ச வருகிறதா ? கொத்த வருகிறதா ?’ என்ற ஒரு வரி வாசகம் மட்டுமே இடம்பெற்றிருந்தது. அந்த விளம்பரம் மக்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது.

நாகம் என்றாலே மக்களிடையே ஒரு தனி ஈர்ப்பும், நம்பிக்கையும், ஆன்மீகத் தொடர்பும் இருக்கிறது. நாகத்தை மையமாக வைத்து உருவான பல படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. நாகக் கன்னிகை, நாக தேவதை கதைகள் முதல் பல படைப்புகள் வரை, நாகத்தின் மீது மக்களுக்கு எப்போதும் ஒரு தனிப்பட்ட ஈர்ப்பு உள்ளது.

அந்த வகையில், ‘நாகபந்தம்’ திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இந்தப் படத்தின் குழுவினருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். படம் மாபெரும் வெற்றியடைய வாழ்த்துகிறேன். நன்றி, வணக்கம்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *